‘ஜி மைம் ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம், மைம் கலையை வளரும் இளைய தலைமுறையினரிடம் வெற்றிக்கரமாக கொண்டு சென்றுள்ள மைம் கோபி, சினிமாவுக்கான நடிப்பி பயிற்சியை கற்பித்து வருவதுடன், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருபவர் .
வருடா  வருடம் தனது  “மைம்”  கலையின்  மூலமாக நடத்தும்  நிகழ்ச்சி மூலம்  ஆதரவற்றவர்களுக்கு பல உதவிகள்  செய்து  வருகிறார் . இந்த  வருடம்  HIV யினால்   பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்காக நிகழ்ச்சி நடத்தப்பட்டது . சென்னை  காமராஜர் அரங்கத்தில் 14 .மே மாலை  6 மணிக்கு  நடைபெற்ற  நிகழ்ச்சியில் பொதுமக்கள்  சினிமாத்துறை  பிரபலங்கள்  பலர் கலந்து கொண்டனர் . 
நிகழ்ச்சியில்  மைம்  கலையில் இசைக்கருவிகளை  வாசிப்பது  போன்ற  நிகழ்ச்சி  பார்வையாளர்களை  வெகுவாக  கவர்ந்தது . அம்மா வின் அருமை  பற்றி  மைம்  கோபி  குழுவினர்  நடித்துக்காட்டியது  பார்வையாளர்களை  கண் கலங்க  வைத்தது .. விழாவுக்கு  வந்திருந்த அனைவரும்  எழுந்து  நின்று கை தட்டினர் .
விழாவில்  பேசிய  இயக்குனர்  பாண்டிராஜ் ….. “மைம்  கோபி  நடத்தும்  இந்த  விழா மதிக்கத்தக்க  ஒரு நிகழசசி …தனக்கு கிடைக்கும் சினிமா  புகழ்  மூலமாக இது போன்ற நிகழ்ச்சிகள்  நடத்தி ,  நல்ல காரியங்களுக்காக தொடர்ந்து  அவர் செய்து  வரும் சேவைகளை   நான் பாராட்டுகிறேன் . சினிமாவில் பிரபலமாக  இருக்கும்  பலரும் இது போன்ற  நல்ல காரியங்களுக்கு உதவ  வேண்டும் , நானும்  எனது பங்களிப்பை  தொடர்ந்து  கொடுத்து வருவேன் .
நான்  குழந்தைகளை வைத்து  படம்  எடுத்து இருக்கிறேன் . இந்த  மேடையில்  இத்தனை குழந்தைகளை ஒரே  நேரத்தில் இவ்வளவு  அருமையாக  நடிக்க வைப்பது  பெரும் சிரமம் . கோபி  அருமையான  ஒரு நடிகர் மட்டுமல்ல , ஒரு நல்ல இயக்குனராக  எனக்கு தெரிகிறார் .  தொடர்ந்து  எனது ஆதரவு  எப்போதும்  மைம்  கோபிக்கும்  இந்த குழுவினருக்கும் உண்டு ” என்று  பேசினார் .
விழாவில் நடிகர்  கிஷோர் பேசும்போது … “கோபியை  நான் பாராட்டுகிறேன் , பிரமாதமான  ஒரு நிகழ்ச்சி  ,எனக்கும்  மைம்  குழுவில் சேர்ந்து  இது போன்று நடிக்கவேண்டும்  என்று ஆசையாக இருக்கிறது , அடுத்த  வருடம் நான்  இந்த  கலையை  கோபியுடன்  கற்றுக்கொண்டு  இதே  மேடையில்  நடிப்பேன்  என்றார் .
விழாவில்  இயக்குனர்கள்   சுசீந்திரன் ,  கரு பழனியப்பன் ,மகிழ் திருமேனி ,பாலாஜி மோகன் ,சிவா , ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன் , நடிகர்கள்  காளி வெங்கட் ,சரவணன் , பாண்டி ,முரளி ,ஆத்மா ,உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர் .

Related Images: