’தாண்டவம்’ வரும் மாத இறுதியில் ரிலீஸ் என்று அறிவிப்பு வந்தவுடனே, சில தினங்களுக்கு முன்பு சூடாக நடந்த படத்தின் கதைப் பஞ்சாயத்து என்ன ஆயிற்று என்று விசாரணையில் இறங்கினால் பல விபரீத தகவல்கள் கிடைக்கின்றன.

கதைக்கு உரிமை கொண்டாடிய உதவி இயக்குனர் பொன்னுச்சாமியை அழைத்து, ‘நாங்கள் முறையாக விசாரணையை முடிக்கும் வரை, இனிமேல் கதை விவகாரம் குறித்து யாரிடமும், குறிப்பாக மீடியாவில் பேசக்கூடாது’ என்று எச்சரித்த இயக்குனர் சங்கம், பாலாஜி சக்திவேல்,மற்றும் ஜனநாதன் தலைமையில் ‘உண்மை அறியும்’ குழு அமைத்து விசாரணை நடத்தினார்களாம்.

இந்த விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, தனஞ்செயனும், விக்ரமும் ‘ஆட்டையைக் கலைக்கும்’ எண்ணத்தில், இயக்குனர் சங்கத்திலிருந்த ஆபீஸ் பாய் வரைக்கும் யூ.டி.வி.யில் படம் இயக்க வாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தை காட்டும் டகால்டி வேலையை விடாமல் பார்த்தார்களாம்.

ஆனால் சற்றே சவ்வாக இழுத்தாலும், தீர்ப்பு உதவி இயக்குனருக்கு சாதகமாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக யூ.டி.வி.க்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்த இயக்குனர் சங்கம், கதையைப் பறிகொடுத்த உதவி இயக்குனருக்கு டைட்டில் கார்டில் பெயர் போடுவது, அவருக்கு முறையான ஒரு சம்பளம் தருவது, கதையை திருடி மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது போன்ற கடுமையான உத்தரவுகளை வழங்கியிருக்கிறதாம்.

ஆனால் இந்த உத்தரவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதில் அதிகபட்சமாக வெக்ஸ் ஆகியிருப்பது தனஞ்செயன் தான். யூ.டிவி.க்காக வடிவமைக்கும் அத்தனை படங்களும் வரிசையாக ‘ஊத்திக்கொண்டிருக்க,தண்டப்பயல் ‘தாண்டவன்’ மூலம் இப்படி ஒரு அவமானமும் வந்து சேரவே, மூன்றெழுத்து தலைவர் இயக்குனருடன் ஒரு கூட்டணி அமைத்து, அவமானங்களை வருமானங்களாக மாற்ற முடியுமா என்று முயற்சித்துக்கொண்டிருக்கிறாராம்.

அதற்கு அந்த பகவான் இயக்குனரோ,’ இதுவரைக்கும் உங்க கம்பெனி தமிழ்ல பண்ண மத்த படங்களை விட பெரிய பட்ஜெட்ல ஒரு படம் பண்ண எனக்கு ஓ.கே. பண்ணுங்க. இயக்குனர் சங்கத்தை இயங்காத சங்கமா நான் பாத்துக்கிறேன்’ என்று ’டீலா? நோ டீலா??’ பேசிக்கொண்டிருக்கிறாராம்.

ஒரு உதவி இயக்குனருக்கு எப்படியெல்லாம் உதவுறாய்ங்க பாருங்க.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.