உலகம் இரண்டு வகைப்படும். ஒன்று ஆர்யா,செல்வராகவன் போன்ற அதிர்ஷ்டசாலிகளுடையது. மற்றொன்று அந்த அதிர்ஷ்டசாலிகளைப் பற்றி படித்து வயிற்றெரிச்சல் கொள்ளும் நம்மைப்போன்ற துரதிர்ஷ்டசாலிகளுடையது.

நம்ம அனுஷ்கா யோகா கலையில் முற்றும் கற்றுத்தேர்ந்து கரைகண்ட கில்லாடி என்பது எத்தனை பேருக்குத்தெரியுமோ தெரியவில்லை. அப்படி கற்ற கலை தன்னோடு போய்விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவ்வப்போது மனசுக்குப் பிடித்தவர்களுக்கு அந்தக் கலையை கற்றுத்தரவும் அவர் தவறுவதில்லை.

கடந்த மூன்று மாதங்களாக செல்வராகவனின் ’இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பில், ஆர்யாவுடன் இருந்த அனுஷ்கா, அவரது சின்சியாரிட்டியால் கவரப்பட்டு, ஆரம்பத்தில் யோகாவில் சின்னச்சின்ன ஸ்டெப்களை கற்றுக்கொடுக்க துவங்கினாராம்.

மாணவன் ஆர்வம் காட்டினால் ஆசிரியரால்சும்மா இருக்க முடியுமா? படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், முழுமூச்சாக இவர்களது யோக’ வகுப்பு நடைபெற ஆரம்பித்ததாம். இடையில் நந்தி அவதாரமெடுத்து இந்த யோகா வகுப்பில் கலந்துகொள்ள துடித்த இயக்குனர் செல்வாவுக்கு கற்றுத்தர ஏனோ அனுஷ்கா ஆர்வம் காட்டவில்லையாம்.

ஜார்ஜியாவில் துவங்கிய யோகா வகுப்புகள் சென்னை திரும்பியபிறகும் தொடர்கிறதா? ஆர்யா தவிர்த்து வேறு மாணவர்கள் யாரையும் வகுப்பில் அனுஷ்கா சேர்ப்பாரா?? என்பது தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், பொதுஜன நலன் கருதி அதை உடனே வெளியிடும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.