’சாருலதா’வின் தோல்விக்கு பார்ட்டி தரும் விதமாக, இன்று மதியம் ரெசிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் ‘மாற்றான்’ குழுவினரின் மட்டன் பிரியாணி பிரஸ்மீட் நடந்தது.
படத்துக்கு பாடல் எழுதிய ஐந்து கவிஞர்கள், கதை,வசனம் எழுதியதாகச் சொல்லப்பட்ட எழுத்தாளர்கள் சுபா, கலை இயக்குனர் ராஜீவன், இயக்குனர் கேடி.வி.ஆனந்த், மற்றும் நாயகன் சூர்யா கலந்துகொண்ட விழாவில், தனது பிஸி ஷெட்யூல் காரணமாக நாயகி காஜல் அகர்வால் மட்டும் மிஸ்ஸிங்.
மேடையேறிய அனைவருமே வளவளா கொழகொழவென பேசி அறுக்க, இறுதியில் பேசிய சூர்யா மட்டும் கொஞ்சம் கலகலப்பூட்டினார்.
’மாற்றான்’ ட்ரெயிலர் வெளியான தினத்திலிருந்தே, அதே மாதிரி இருந்த வெளிநாட்டுப்பட ட்ரெயிலர்களை லிங்க் எடுத்துப்போட்டு,இது அந்தப்படத்தோட காப்பி, இந்தப்படத்தோட காப்பின்னு ’கிளப்பி விட’ ஆரம்பிச்சாங்க. அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம ஒரு டீமா இந்தப்படம் ஜெயிக்க நாங்க கடுமையா உழைச்சிருக்கோம்.
படத்துல வர்ற முகிலன் என்னை மாதிரி ரொம்ப நல்ல பையன். ஆனா அகிலன் நான் இதுவரைக்கும் கேள்விப்படக்கூட இல்லாத அளவுக்கு பயங்கர கேடி. இந்த கேடி கேரக்டரை கே.வி.ஆனந்த் சார் எங்க இருந்து ’புடிச்சார்னு’ எனக்கு சொல்லவே இல்லை’’ என்றவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியிலிருந்து ‘’ வேற எங்க இருந்து வழக்கம்ப்போல திருட்டு டிவிடியில இருந்துதான்’’ என்று குரல் எழுந்தது.
அப்பொதைக்கு மட்டும் காது கேக்காது மாதிரியே ஒரு பிரமாதமான பெர்ஃபார்மென்சை கே.வி. ஆனந்த் வழங்கினார்.
இரட்டையர்களான எழுத்தாளர்கள் சுபா பேசும்போது,’’ கே.வி.ஆனந்த் இந்த ‘மாற்றான்’ கதையை ஒரு தாய்லாந்து ஃப்ளைட் பத்திரிகையில் கண்டுபிடித்து கருப்பிடித்ததை மறுபடியும் உரு பிடிக்க ஆரம்பித்ததும் கே.வி. ஆனந்த், ‘’யோவ் எல்லாரும் மறக்க ஆரம்பிச்சதை ஏய்யா மறுபடியும் ஞாபகப்படுத்துறீங்க? என்பதுபோல் பாவமாக பார்க்க, அதைப்புரிந்து கொண்டு காமெடியாகப்பேசுகிறோம் என்ற பெயரில் சிலபல டிராஜடிகளை நடத்திவிட்டு அமர்ந்தார்கள்.
படத்தின் பட்ஜெட், பேசியதை விட அதிகமானதால், தயாரிப்பாளர் தரப்பில் சம்பளப் பிடித்தம் எதுவும் நடந்துவிட்டதாலோ என்னவோ, நிகழ்ச்சி முழுக்கவுமே மூட்-அவுட்டாகவே இருந்த ஆனந்த், பத்திரிகையாளர்கள் ‘சாருலதா’ படத்தைப் பற்றி என்ன கேள்வி கேட்டாலும்,’ஸாரிலதாவைப் பத்தி எங்கிட்ட எதுக்குக்கேக்குறீங்க?’ என்று எரிந்து விழுந்து,எழுந்தார்.
யாரு கண்டா, கே.வி. வாலிப வயோதிக அன்பரா இருந்த காலத்துல சாருலதாங்குற பேர்ல ஒரு பொண்ணு இவர லவ் பண்ணி ஏமாத்திட்டுப் போயிருக்கலாம்.