எங்கேயோ , ஏதோ , என்னமோ நடந்து கொண்டுதான் இருக்கிறது . சிலவற்றை நாம் பார்க்கிறோம் …சிலதை நாம் அறிகிறோம்.
இவற்றில் நம் கற்பனைக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட சம்பவங்களின் தொகுப்புதான் ”என்னமோ நடக்குது ”.
ஒரு சராசரி இளைஞனின் வாழ்வில் வரும் காதலும் அதன் தொடர்ச்சியாக சமுதாயத்தின் இரு பெரு தூண்களிடையே சிக்கி போராடி வெற்றி
பெரும் கதைதான ‘என்னமோ நடக்குது ‘.
இப்படி என்னமோ ஏதோ படத்தைப் பற்றிச் சொல்லி நம்மை மிரளவைக்கிறார் புதுமுக இயக்குனர் ராஜபாண்டி. இவர் ஏற்கனவே சின்னத்திரை விளம்பரப்படங்கள் எடுத்துக் கொணடிருந்தவராம்.
பிரபு மற்றும் ரகுமான் ஆகியோர் முக்கிய வேடங்களி்ல் நடிக்க புதுமுகம் விஜய்வசந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். கங்கை அமரனின் மகன் ப்ரேம்ஜி அமரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு ஏ.வெங்கடேஷ்; கதை இரா.முருகன், வசனம் ப்ரகாஷ் ராமசாமி. இப்படத்தை ட்ரிப்பிள் வி ரெக்கார்ட்ஸ் வினோத்குமார் தயாரிக்கிறார்.
எல்லாம் ரெடி. ஆனா படத்துக்கு ஹீரோயின் மட்டும் ரெடியில்லையாம். தமிழ்நாட்டில் பெண்களுக்கு அவ்வளவு பஞ்சம் வந்துவிட்டதா என்ன?
ஆனாலும் 26ம் தேதி முதல் ஷூட்டிங் ஆரம்பித்து வேலைகள் மளமளவென நடக்க ஆரம்பித்துவிட்டன. என்ன நடக்குது ?