‘இந்த செல்போனை எவண்டா கண்டுபிடிச்சித் தொலைச்சான். அவன அந்த போனாலேயே அடிச்சிக்கொல்லனும் என்று தோன்றும் ஒரு நாள். மறுநாளோ, ஒரு ரெண்டு மணிநேரத்துக்கு, ஒருவரிடமிருந்தும் போன் வராமலிருந்தால், அய்யஹோ இந்த அகிலமே நம்மை மறந்துவிட்டதோ? என்று தோன்றும்.
இதில் முதல் ஸ்டேஜை முற்றிலும் கடந்து, இரண்டாவது ஸ்டேஜின் இக்கட்டான நிலையில் இருப்பவர் நம்ம அயன்தாரா. மேஸ்டர் பிரபுதேவாவை விட்டுப் பிரிந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்து, தமிழ், தெலுங்கு இண்டஸ்ட்ரிக்குள் ரீ-எண்ட்ரி ஆனபோது, இருகரம் கூப்பி வரவேற்றவர்கள், இப்போது அம்மணி விவகாரத்தில் அவ்வளவு ஆர்வமாக இல்லையென்று அவர் ரொம்பவும் ஃபீல் பண்ணுகிறாராம்.
தமிழிலாவது அஜீத், ஆர்யாவுடன் ஒரு படம், ஜெய்யுடன் ஒரு படம் என்று வெளியே சொல்லிக்கொள்கிறமாதிரி இரு படங்கள் கைவசம் வைத்திருக்கும் நயனின் தெலுங்கு மார்க்கெட் நிலவரம், வெளியே சொல்லிக்கொள்ளமுடியாத அளவுக்கு கலவரமானது. அதிலும் அவரது கடைசி ரிலீஸான ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரம்’ செமத்தியாக ஊத்திக்கொண்டதில்,அடுத்தடுத்த தெலுங்குப் படங்களுக்கு அழைப்பு வராததில், நயன் ரொம்பவே அப்செட்டாம்.
இதே நேரத்தில் அமலாபால்,தமன்னாதயிர் போன்றவர்களின் ஹைதராபாத் நடமாட்டம் வேறு நயனை நரநரவென்று பல்லைக் கடிக்கவைக்க, மீண்டும் புதுமுகம் போல் ஒரு ரவுண்டு வரும் முடிவில், அழையாத படவிழாக்களுக்கெல்லாம் படு கிளாமரான காஸ்ட்யூம்களுடன் ஆஜராக ஆரம்பித்துவிட்டாராம்.
யாரு கண்டது? முன்ன ஒரு காலத்தில் இப்படி ஒரு கிளாமரான நயனைப் பார்த்து லவ் பண்ண ஆரம்பித்த மாஸ்டர், பழையபடியும் காதலில் விழுந்து,’நலம் தானா, நயன் தாரா?’ என்று பாடி, நம்மை தாடிசொறிய வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.