தனது காலில் தசை நார் கிழிந்ததை சரி செய்யும் ஆப்பரேஷனை இம்மாதம் செய்ய இருந்த அஜித், விஷ்ணுவர்த்தன் படம் முடிவதற்காக அதைத் தள்ளி வைத்துள்ளார்.
காரணம் இப்படம் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு மிகவும் எதிர்பார்ப்பையும் அவரது பழைய நஷ்டங்களைச் சரிசெய்யும் நம்பிக்கையையும் கொடுக்கும் படமாக இருப்பதால் அவருக்கு ஏமாற்றத்தைத் தர விரும்பாத அஜித் ஆப்பரேஷனை தள்ளிவைத்தார் என்று கூறப்படுகிறது.
விஷ்ணுவர்தனின் படம் கிட்டத்தட்ட பெரும்பகுதி முடிவடைந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமும் முடிவாகியுள்ளது.
விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி தயாரிக்க, ‘சிறுத்தை’ இயக்குனர் சிவா இப்படத்தை ஒரு ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சகமான படமாக இயக்க இருக்கிறார்.
இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் ஜோடியாக நடிக்க இருப்பவர் தமன்னா.
ஒளிப்பதிவை வெற்றியும், இசையை தேவி ஸ்ரீ ப்ரசாத்தும், கலையை பிரபாகரும் கவனித்துக் கொள்கிறார்கள்.
படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இருப்பது என்னவோ வரும் மார்ச் மாதம் தான் என்றாலும் டிசம்பர் 2ம் தேதி பாடல் பதிவுடன் படம் முறைப்படி ஆரம்பிக்க இருக்கிறது. காரணம் அன்று தயாரிப்பாளர் நாகிரெட்டியின் 100 வது ஆண்டு பிறந்த நாள் வருகிறது. அதை நினைவு கூறும் வகையிலேயே அன்று ஒரு பாடல் பதிவு செய்ய இருக்கிறார்களாம்.
இப்படத்தில் அஜித்துடன் விதார்த், பாலா, முனீஸ், சோஹில் , ஜெயராம் மற்றும் சந்தானம் நடிக்க இருக்கிறார்கள்.