3d-thedi-pidi-adi-movie-news

ஏகன் என்கிற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் வித்தியாசமான படம் தான் தே.பி.அடி.

இந்தக் காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்ல, காதல் ஜோடிகளிடையே கூட டேட்டிங் என்கிற பழக்கம் பெருகி வருகிறது. முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் மாணவனும் மாணவியும் பேசிக் கொள்வதே தவறு என்று கூறப்பட்டது. பின்னர் பேச ஆரம்பித்து அது காதல் வரை செல்வது சகஜமாகிப் போய் இன்று டேட்டிங்கில் போய் நிற்கிறது.

இப்படி மாறி நிற்கும் இந்தக் கால மாற்றத்தில் உறவுகள், அன்பு, காதல் இவற்றில் உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டிருக்கிறது. இதை மையமாக வைத்து த்ரில்லராக எடுக்கப்பட்டிருக்கிறது தே.பி.அடி.

அடர்ந்த காட்டுக்குள் டேட்டிங் செல்லும் காதல் ஜோடிகளுக்கு நடக்கும் திகில் சம்பவங்களின் பிண்ணனியில் இந்த டேட்டிங் பிரச்சனையைப் பேச வருகிறார் ஏகன்.

இது 3டி படமா என்றால் இல்லை என்கிறார் ? பின்னே ஏன் 3டி என்று கேட்டால் சும்மா ஒரு ரைமிங்குக்காக என்று சிரிக்கிறார். 3டி என்பது தேடி..பிடி..அடியில் வரும் மூன்று ‘டி’க்கள் தான். வேறொன்றுமில்லை.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.