genelia-cooking-after-marriage-news

முன்னாள் மஹாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வரான மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் கொண்டு செட்டிலாகிவிட்ட ஜெனீலியா டிசௌசாவின் லேட்டஸ்ட் ஹாபி வண்டி வண்டியாக, வகை தொகையில்லாமல் சமைப்பது

தானாம்.

தேஷ்முக் எங்கு ஷூட்டிங் சென்றாலும் அவருக்கு தன் கையாலேயே சாப்பாடு செய்து எடுத்துக் கொண்டு கேரியரோடு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஆஜராகிவிடுகிறாராம் ஜெனீ. தினமும் விதம் விதமான அயிட்டங்களைத் தயார் செய்துகொண்டு வந்து தேஷ்முக்குக்கு மட்டுமல்ல உடனிருக்கும் இயக்குனர், சக நடிகர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்து செய்து வந்து கொடுத்து சாப்பிடவைத்து அன்புத் தொல்லை தருகிறாராம்.

அம்மணீ சமைப்பது எல்லாம் பெரும்பாலும் மஹாராஷ்ட்ர அயிட்டங்கள் தானாம். ரொம்ப நல்லது அம்மணீ. கணவனுக்கு ஏத்த மனைவியாக பாஸாயிட்டீங்க. வாழ்த்துக்கள். எல்லாம் சரிதான். இன்னும் யாரையாவது தவறுதலா முட்டிட்டா பதிலுக்கு வேணும்னே ஓடி வந்து ஓங்கி தலையோட தலையிடிக்கிற பழக்கம் இன்னும் இருக்குங்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.