மும்பை நடிகைகளில் பலர் நடிப்பது தவிர அவ்வப்போது ஆல்பங்களில் பாடுவது அல்லது நடனமாடுவது போன்ற விஷயங்களையும் செய்துவருகிறார்கள். அந்த லிஸ்ட்டில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் முமைத்கான். பொதுவாக படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனம் என்றிருக்கும் வழக்கமான தனது விஷயங்களிலிருந்து மாறுபட ஒரு ஆல்பத்தில் பாட ஆரம்பித்திருக்கிறார்.
பிரபல பாப் பாடகி ஷகிராவின் ஆல்பங்களைப் பார்த்து அதே பாணியில், ஸ்டைலில் தனது நடனம் மற்றும் பாடலுடன் அடிக்ஷன் என்கிற ஆல்பத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். இந்த மியூசிக் வீடியோவில் ஷகிரா போலவேயான கெட்டப்பில் தோன்றி பாடல்களைப் பாடியபடி நடனமாடுகிறாராம் முமைத்.
பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் சர்வதேசப் புகழ்பெற்ற டி.ஜே. சீஸ்வுட் இசையமைத்துள்ளார். இணையத்தில் இதுவரை ஐம்பதாயிரம் ஹிட்டுக்கள் அடித்துள்ளதாம் இந்த ஆல்பம்.