டிசம்பர் 1984, மத்தியப் பிரதேசம் போபாலில், உலகிலேயே அதிக அளவு மக்களைப் பலிகொண்ட தொழிற்சாலை விபத்தான போபால் விஷவாயு விபத்து நடந்தது. நள்ளிரவில் சயனைட் என்ற உடனடியாகக் கொல்லக்கூடிய விஷவாயு கசிந்து சுற்றியிருந்த கிராமங்களிலிருந்த சுமார் 20,000 பேரை உடனடியாகவும் பல லட்சம் பேர்களை 10 வருடங்களில் மெதுவாகவும் கொன்றது.

அந்த விபத்தை பூசி மெழுகிய யூனியன் கார்பைடு என்கிற அந்த அமெரிக்க தனியார் கம்பெனியின் முதலாளி ஆன்டர்சனை தந்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது இந்திய அரசு. பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக யாரும் வழக்கு தொடர்நதுவிடக்கூடாது என்று திட்டமிட்டு ஒரு சட்டமே இயற்றி மக்களின் சார்பாக தானே ஆஜராகிறேன் என்று அரசு சொல்லிக்கொண்டது. இன்று வரை அந்த விபத்தில் உயிரிழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடோ, மறுவாழ்வோ வழங்கப்படவே இல்லை.

சரியாக 30 வருடம் கழித்து அதையே ஒரு ஆங்கிலப் படமாக எடுத்திருக்கிறார் ரவிகுமார் என்பவர். படத்தின் பெயர் ‘போபால் – மழைக்கான ஒரு பிரார்த்தனை’.

இந்தப் படத்தில் அமெரிக்காவுக்கு தப்பித்த யூனியன் கார்பைடு முதலாளியாக நடித்தவர் மார்ட்டின் ஷீன். இப்படத்தின் கதையில் ஆன்டர்சனை நல்லவர் போலவும், ஹீரோ போலவும் சித்தரிந்திருந்திருக்கிறார்கள். ஸ்கிரிப்டை படித்துவிட்டு ஆன்டர்சன் செய்திருப்பது ஒரு மோசமான செயல். அவரை வில்லனாகத் தான் காட்டியிருக்கவேண்டும். அப்படிச் செய்ய நீங்கள் முன்வந்தால் மட்டுமே நான் இந்தப் பாத்திரத்தில் நடிப்பேன். இல்லாவிட்டால் வேறு ஆளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றிருக்கிறார். ஸ்க்ரிப்டை அவ்வாறு மாற்றிய பின்னரே படத்தில் நடித்தாராம். பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியிருக்கிறார் மார்ட்டின் ஷீன்.

நம்ம ஊர் ரத்தினங்கள் பம்பாய் கலவரத்தின் உண்மை நிகழ்வுகளையே திரித்துக் கூறியும், ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்தியும் எடுத்த படங்கள் தான் உண்டு. இது போன்ற நேர்மையும், விஷயங்களை ஆணித்தரமாக, நேர்மையாகப் பேசும் ‘தில்’ நம் தமிழ் நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஏன் இல்லை?

Related Images: