இலங்கையின் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் ஜனவரி மாதம் நடக்க இருக்கிறது. இனப் படுகொலைகளை நிகழத்தி இரண்டு லட்சம் தமிழர்களைக் கொன்றுள்ள ராஜபக்ஷே சிங்கள மக்களுக்கு அதையே தீவிரவாதிகளை அழித்ததாக வீர வசனம் பேசி ஓட்டு வாங்கி இரண்டாம் முறையும்  அதிபரானார்.

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி இரண்டுமுறைக்கு மேல் ஒருவர் தொடர்ந்து அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது என்கிற விதி இவ்வளவு நாளும் இருந்து வந்தது. தான் மூன்றாவது முறையாக போட்டியிட வசதியாக  இதை சிறப்பு சட்டம் போட்டு மாற்றியமைத்துவிட்டார்.

தேர்தலில் 3ஆம் முறையாக போட்டியிடும் ராஜபக்ஷேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சேர்ந்து மைத்திரி பால் ஸ்ரீசேனா என்பவரை நிறுத்தியுள்ளன. இரண்டு அணிகளுமே விடுதலைப் புலிகளையும் ( அத்தோடு தமிழர்களையும் ) நாங்கள் தான் அழித்தோ்ம் என்று சொல்லியே மக்களிடம் ஓட்டு வாங்குகின்றன.

வடக்கு மாகாணமான தமிழர் பகுதிகளில் வரும்போது மட்டும் பகட்டான விஷயங்களை தமிழருக்குக் காண்பிக்கின்றனர். இங்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த ராஜபக்சே தமிழில் ஒரு ஐந்து நிமிடம் பேசினார். இந்த மாதிரியான தேர்தல் பிரச்சார பில்டப் வேலைகளுக்கு பாலிவுட்டிலிருந்து நமல் ராஜபக்ஷேவின் க்ளோஸ் ப்ரெண்ட் என்கிற முறையில் சல்மான்கானும், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸூம் சென்றிருக்கின்றனர். ஜாக்குலின் இலங்கையில் பிறந்த ஒரு சிங்களப் பெண்.

தமிழர்களை நிரந்தரமாக பிரித்தழித்து சிறு சிறு துகள்களாக மாற்றும் எண்ணத்துடன் தமிழர் அடையாளங்களைக் கூட அங்கே அழித்து சிங்கள ராணுவத்தை தமிழர் இடங்களில் குடியமர்த்தும் ராஜபக்ஷே, 3ம் முறையாக தேர்தலுக்கு நிற்பதை காமன் வெல்த் மாநாட்டுக்குப் போன நம்ம ‘ந.மோ’ கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னதை ஏற்கனவே பார்த்தோம். இப்போது இப்படி இந்தியர்கள் தமிழர்களுக்கு எதிராக இப்படிக் களம் இறங்குவதையும் பார்க்கிறோம். ராஜபக்சே நம்ம ஊர் தந்தி டி.வி.க்கு ஸ்பெஷல் பேட்டி வேறு குடுக்கிறார். எல்லாம் கலிகாலம். !!

தமிழர்களே தெரிஞ்சுக்குங்க.. இதுதான் மோடியின் இந்துத்துவா தமிழருக்கு வாழ்வு தரும் லட்சணம்.

Related Images: