சில ஆண்டுகளுக்கு முன்புவரை மலிவான மசாலாப்படங்கள் எடுத்து தெளிவாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவர் இயக்குநர் சக்தி சிதம்பரம்.

அரைத்த மாவையே அரைத்த,அவரது கடைசி ஒன்றிரண்டு படங்களை ரசிகர்கள் ‘கண்டுகொள்ளாமல்’ போகவே மார்க்கெட் டல்லாகி தள்ளாடிப்போனார்.

நாம் நல்ல படம்தான் எடுத்திருக்கிறோம். படத்தில் போட்ட ஹீரோக்களைத்தான் மக்களுக்குப் பிடிக்கவில்லை போல என்று  முடிவு செய்தவர் கடைசியாக ‘மச்சான்’ என்ற படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார். அப்படம் முடிந்து ரிலீஸ்க்குத்தயாரான நிலையில் பிரிவியூ பார்த்த சிலர் தியேட்டர்க்கு வெளியே வந்தவுடன் வாந்திபேதி கண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனதும் விபரீதத்தைப் புரிந்துகொண்ட சக்திசிதம்பரம் அடுத்து ஷோ போடுவதை கட் பண்ணிக்கொண்டு, அமைதியாக, அடுத்த படத்தை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார்.

’திருட்டுப்பயலே’ நான் அவன் இல்லை’ என்ற இரண்டே இரண்டு ஹிட்டுக்களைக் கொடுத்துவிட்டு தலைகால் புரியாமல் ஆடி, அடிபட்டு வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த நொண்டிக்குதிரையான  ஜீவன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ’ஜெயிக்கிற குதிர’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இவர் கடைசியாக ஹீரோவாக நடித்த ‘கிருஷ்ண லீலா’வும் சில வருடங்களாக பெட்டிக்குள் முடங்கிக்கிடக்கிறது.

கதாநாயகிகளாக மூன்று குதிரைகள்… டிம்பிள் சோப்டே, அம்பிகாசோனி, திராவியா நடிக்கிறார்கள்.

இதோ படம் முழுக்க ஒவ்வொரு குதிரையா இப்பிடி தோள்ல தூக்கிட்டுத்தான் சவாரி போறாராம் ஜீவன்.  வெளங்கின மாதிரிதான்.

 

 

Related Images: