ரஷ்யா புதிய வகை வான் கப்பலை தயாரித்துள்ளது. விமானம், ஹெலிகாப்டர், ஹோவர் கிராப்ட் ஆகிய மூன்று தொழில்நுட்பங்களையும் சேர்த்து உள்ளடக்கிய புதிய வகை விமானம் இது. இது மேலெழுவதற்கு ரன்வே தேவையில்லை. பழைய காலத்தில் செய்யப்பட்ட காற்றுப் பலூன் வகை
விமானங்களின் வடிவத்தை இது ஒத்திருக்கிறது.
அட்லன்ட்(Atlant) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வான்கப்பல்கள் இரண்டு மாடல்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. அட்லன்ட்-100 மற்றும் அட்லன்ட்-30.இதில் அட்லன்ட்-100 சுமார் 200 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. மணிக்கு 140 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. 130 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் 60 டன்கள் வரை ஏற்றிச் செல்லக்கூடியது. சிறிய மாடலான அட்லன்ட்-30 75 மீட்டர் நீளம் கொண்டது. 16 டன்கள் வரை எடை ஏற்றிக் கொண்டு, மணிக்கு 170 கி.மீ வேகம் வரையில் செல்லக்கூடியது.
அட்லன்ட் வடிவமைப்பில் முந்தைய வான்கப்பல்களைப் போல துணியாலான ற்கூரையில்லாமல் மெல்லிய ஆனால் உறுதியான உலோகத்தாலான மேற்கூரை கொண்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவத் தயாரிப்பான இதன் விலை சுமார் 100 கோடி ரூபாய். இந்த மாதிரி வான்கப்பல்களின் நன்மை என்னவென்றால் சாதாரண வழியில் அடையமுடியாத இடங்கள், மலை உச்சிகள், போன்ற இடங்களுக்கு கனரகப் பொருட்களை கொண்டு செல்வதை இது எளிமையாக்கும்.