இந்தியாவில் மூன்று மாதங்களுக்கு முன்பு ரிலீசான சாம்சங் கேலக்ஸி எஸ்-6 மாடல் வெளியானபோது 50 ஆயிரம் ருபாய்க்கு விற்க்கப்பட்டது. சில வாரங்களாக அதன் விலை 42 ஆயிரத்துக்கு வந்திருந்தது.
சாம்சங் கேலக்ஸி 5.1 இன்ச் அமோல்ட் ஸ்க்ரீன் உடன் 1440 X 2560 பிக்சல் கொண்ட ஹை ரிசொல்யுஷன் மொபைல் போன்களிலேயே அதிக ரிசொல்யூஷனாகும். 64 பிட், 2.1 GHz கொண்ட எக்சினோஸ் 7 பிராசசரை உள்ளடக்கியது. இதனால் இது முந்தைய கேலக்ஸி மாடல்களை விட 35% கூடுதல் வேகமாகச் செயல்படுகிறது.
இதற்குப் போட்டியாளரான ஆப்பிளின் ஐபோன் 6 ம் 43000 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி டி.டி.ஆர். 4 ராம்(RAM) உபயோகப்படுத்துகிறது. இதனால் இதில் ஆப்கள் ஓடும் மெமரி 80% அதிகமாகக் கிடைக்கிறது. பின்பக்க கேமரா 16மெகா பிக்சல் ரிசொல்யூஷன்
கொண்ட ஹெச்.டி.ஆர் வகை கேமராவாகும். இது தவிர இதன் பேட்டரியை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 4 மணி நேரத்துக்கு வேலை செய்யும் அளவு சார்ஜ் ஏற்ற முடியும்.
இவ்வளவு வசதிகளிருந்தும் விற்பனை எதிர்பார்த்த அளவு போகவில்லை ஆதலால் அதன் விலை இன்னும் குறைந்து 40 ஆயிரத்துக்கும் கீழே வந்திருப்பதாக மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.