செயற்கைக் கோள் பூமியை எடுத்த புகைப்படங்களைத் தான் அடிக்கடி டி.வி. வானிலை அறிக்கைகளில் காட்டிக் கொண்டிருப்பார்கள். நாம் பார்த்திருக்கிறோம்.  பூமியிலிருந்து வானத்தை நோக்கி, பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிலாவின் பிண்ணணியில் புகைப்படம் எடுத்திருக்கிறார் டிலன் ஓடோன்னல் என்கிற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வான்வெளி புகைப்படக் கலைஞர்.

பூமியிலிருந்து வானத்தில் எங்கோ செல்லும் இத்தினியூண்டு விண்வெளி நிலையத்தை எப்படி எடுத்தார்? அவருடைய கேனன் 70டி கேமராவை ஒரு ஸெலஸ்ட்ரான் 9.25″ டெலஸ்கோப்பின் பின்னால் வைத்து வானத்தை உற்று நோக்கி சரியாக விண்வெளி நிலையம் ஆஸ்திரேலியாவின் மேல் வரும் போது தொடர்ச்சியாக பல புகைப்படங்கள் எடுத்தார்.

பூமியிலிருந்து பார்க்கும் போது விண்வெளி நிலையமானது .33 செகண்டுகளில் நிலாவைக் கடந்து போய் விடுமாம். அவ்வளவு சிறிய நேரத்தை சரியாகக் கணித்து நிலா சரியாக வி.நிலையத்தின் பினனணியில் வரும்போது புகைப்படம் எடுத்தால் மட்டுமே வி.நிலையம் நிலாவுடனும் சேர்ந்து தெரிய வாய்ப்பிருக்கிறது. இதற்காக இவர் 12 மாதங்கள் வரை காத்திருக்க நேர்ந்தது.

கால்ஸ்கை என்கிற வெப்சைட்(CallSky Website) ல் விண்வெளி நிலையத்தின் தற்போதைய இடம் தொடர்ந்து சொல்லப்படுவதைப் பாலோ பண்ணிய அவர் ஒரு செகண்டில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தில் நிகழும் இந்த நிகழ்வை புகைப்படம் எடுத்துள்ளார். ஒரு 1/1650 செகண்டு ஷட்டர் ஸ்பீடு உபயோகப்படுத்தியுள்ளார். அதாவது ஒரு செகண்டில் 1650ல் ஒரு பங்கு நேரம்.

படத்தில் மேல் வலது பக்கத்தில் சின்னதாகத் தெரிவது தான் சர்வதேச விண்வெளி நிலையம். பின்னால் பிரமாண்டமாய் தெரிவது நிலவு.

Related Images: