ஒரு ஹீரோவின் லட்சணம் என்பது அட்லீஸ்ட் 5 படத்துக்கு ஒரு ஹிட் கொடுப்பது என்றாவது இருக்கவேண்டாமா? ஆனால் நடிகர் ஜீவாவின் கேரியரைப் பாருங்கள். முனியாண்டி விலாஸ் டிபன் கேரியரை விடவும் மோசம். நடித்த 40 படங்களில் நாலு படங்களுக்கு பாஸ் மார்க் போடுவதற்கே பரிதவிக்க வேண்டியிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான, சற்றே பெரிய பட்ஜெட்டில் வெளியான ‘போக்கிரி ராஜா’ தயாரிப்பாளரையும் விநியோகஸ்தர்களையும் பேக்கரி ராஜாக்கள் ஆக்கிவிட, அடுத்தடுத்து துவங்குவதாக இருந்த அத்தனை படங்களும் ஜகா வாங்கப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட ‘ஜெமினி கணேசன்’ கடந்த வாரம் டிராப் பண்ணப்பட்டுவிட்டதாம்.
இந்த ‘ஜெமினி கணேசன்’ டைட்டிலை வாங்குவதற்காக தயாரிப்பாளர் ஜெமினி கணேசன் உறவினர்கள் இல்லத்துக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் அலைந்த கதையே பரிதாபம் எனும்போது, தற்போது படமும் கைவிடப்பட்டைருப்பது துரதிர்ஷ்டவசமானது.
நயனுடன் ஜீவா நடித்திருக்கும் ‘திருநாள்’ம் ஓடாவிட்டால், ஜீவா முழுநேர சிசிஎல் கிரிக்கெட் பிளேயராகிவிடுவது நாட்டுக்கு நல்லது.