பத்திரிகையாளர்களுக்கு போரடிக்கும் நேரங்களில் ஷங்கரைக் கூட தங்கராக மாற்றி தவில் வாசிப்பார்கள். அதில் சில செய்திகள் ’தங்கரும் ஷங்கரும் ஒண்ணா படிச்சவங்க’ ரீதியில் கூட இருக்கும். அப்படி ஒரு செய்தியாக ரஜினியை வைத்து அவர் இயக்கி வரும் ’2பாய்ண்ட்0’ படத்தில் ஒரே ஒரு பாட்டுதான் என்று துக்கப்பட்டு துயரப்பட்டார்கள்.
‘என்னது ஷங்கர் படத்துல ஒரே ஒரு பாட்டா? என்று ஒரு சில ஆதங்கக்குரல்கள் அவர்களுடன் கோரஷாக ஒலித்துக்கொண்டிருந்த நிலையில் ‘ஏ.ஆர்.ரகுமான் மாதிரி ஒரு மியூசிக் டைரக்டரை வச்சிக்கிட்டு, ஒரு பாட்டு மட்டும் படத்துல வக்கிற அளவுக்கு நாங்க வெவரம் இல்லாதவங்களா? ஆடியோ ரிலீஸ் வரைக்கும் வெயிட் பண்ணுங்க. கேக்குறவங்க ஆடிப்போற அளவுக்கு அத்தனை பாட்டுக்கள் இருக்கு’ என்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராஜூ மகாலிங்கம்.
அதானே ஷங்கர் அஞ்சு பாட்டு, நாலு ஃபைட்டு இல்லாம ஒரு படம் எடுத்துருவாரா என்ன?

