பாடகர் அருண்மொழியின் பிறந்த நாள் இன்று…எல்லோருக்கும் இசை பிடிக்கும். எனக்கு இவரது குரலும் பிடிக்கும். இசையும் பிடிக்கும். அவர் பாடகர், புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி.

இசைஞானி இசையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக
எத்தனை ஹிட் பாடல்களுக்கு இசைவழங்கிய அற்புத கலைஞன். தமிழ் திரை இசை உலகில் இத்தனை பாடல்களைப் பாடிய முதல் இசைக்கலைஞர் இவர் தான்.

“இசைக்கு எப்படி நானோ, புல்லாங்குழலுக்கு அருண்மொழி” என இசைஞானியால் புகழப்பட்டவர்.

அவரின் மெல்லிய குரல் எல்லா கதாநாயகர்களுக்கும் பொருந்தியது. ரஜினிகாந்த் முதல் செவ்வந்தி சந்தனப்பாண்டியன் வரை அத்தனை பேருக்கும் பொருந்தியது. குறிப்பாக, நடிகர் பார்த்திபனின் அச்சு அசல் குரலாக அருண்மொழி குரல் இருந்தது தான் வினோதம். அவர் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பதே ஒரு சுகானுபவம்.

சலசலத்து ஓடும் நதியின் அருகே தவழும் காற்றை ரசிப்பது போன்ற உணர்வைத் தரக்கூடியது அருண்மொழியின் குரல். சிறந்த இசைக்கலைஞர், பாடகர், சிறந்த கவிஞர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞரான அருண்மொழி பாடிய சில பாடல்களைப் பட்டியலிடுகிறேன்.

நானென்பது நீயல்லவோ தேவதேவி
வராது வந்த நாயகன்
வெள்ளிக் கொலுசு மணி
எத்தனை மணிக்கு என்னை வரச்சொன்னடி
ஆத்திலே அன்னக்கிளி
என் வீட்டு ஜன்னல் எட்டி
மான்குட்டி நீ வாடி
நீலக்குயிலே சோலைக்குயிலே பாடிப்பறக்கும்
தென்றல் வரும் முன்னே முன்னே
ஆனந்த குயிலின் பாட்டு
மனசுக்குள்ள நாயனச் சத்தம்
மஸ்தானா மஸ்தானா
காதல் நிலாவே பூவே கைமீது சேராவா
நான் ஒன்று கேட்பேன் தருவாயா
ஆராரோ பாட்டுப்பாட நானும்
உன்னை காணாமல் நான் ஏது
வெண்ணிலவுக்கு வானத்த பிடிக்கலையா
நீதானா நீதானா நெஞ்சே நீதானா
எங்கள் வீட்டில் ௭ல்லா நாளும்
தென்றலுக்கு தெரியுமா
௭னது ராகம் மௌனராகம்
அடி ஆச மச்சான்
கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
அம்மன் கோவில் எல்லாமே
ராத்திரியில் பாடும் பாட்டு
முத்தம்மா முத்து முத்து
திருமகள் உன் முகம் காண வேண்டும்
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
மனசுக்குள்ள நாயனச்சத்தம்
கெழக்கால செவுத்துப் பக்கம்
ஆதாமும் ஏவாளும் போல
ஆராரோ பாட்டுப் பாட
கஞ்சி கலயந்தான்
கன்னியாகுமரி நீயே என்னைக் கண்ணெடுத்து
வாசக் கறிவேப்பிலையே
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ஒத்த ரூவா தாரேன்
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி
வேண்டினா வேண்டும் வரம்
ஒரு சுந்தரி வந்தாளாம்
செம்பருத்திப்பூ
அரும்பும் தளிரே
ஏளா அழகம்மா
சலக்கு சலக்கு சரிகைச்சேலை
ஓடைக்குயில் ஒன்று
ஏ ராசாத்தி பூச்சூட்டி
சாந்து பொட்டும் சந்தனப்பொட்டும்
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
என் வீட்டு ஜன்னல் எட்டி
சொல்லாயோ வாய் திறந்து
கம்மாக்கரை ஓரமா
இது போல எத்தனை விதமான பாடல்கள். மீண்டும் அவர் குரலைக் கேட்க வேண்டும் என்று ஏங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் . பாடகர் அருண்மொழி என்ற நெப்போலியன் செல்வராஜ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  • ப.கவிதா குமார்

Related Images: