அனைவருக்கும் வணக்கம் . பாலு மகேந்திரா நூலகம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் துவக்கப்பட்டு இயங்கி வந்த முகவரியிலிருந்து கூடுதல் இட வசதியுடன் நவீன மாற்றங்களுடன் மகாலஷ்மி குடியிருப்பு , அன்பு நகர் வளசரவாக்கம் எனும் புதிய முகவரியில் வரும் பிப் 13 பாலு மகேந்திரா சார் அவர்களின் நினைவு நாளில் துவங்க விருக்கிறது .

இந்த புதிய இருப்பிடத்துக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் கூடுதல் மேம்படுத்தப்பட்ட வசதிக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கும் இயக்குனர் வெற்றி மாறன் அவர்களின் அளப்பரிய உள்ளத்தை நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன் .
அசுரன் நூறாவது நாள் வெற்றி விழா வுக்கு வாழ்த்து சொன்ன போது என்னிடம் நம்ம லைப்ரரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என சொல்லி யோசித்து பின் அவரே புதிய இருப்பிட ஆலோசனை சொன்னார். துவக்கத்தில் நூல்கள் வாங்கிக்கொள்ள கொடையாக சில நெருங்கிய நண்பர்கள் கொடுத்த பண உதவி தவிர்த்து கடந்த இரண்டு வருடமாக நான் நூலகத்தை என் சொந்த கைப்பணத்திலேயே நடத்தி வருகிறேன் . ஒரு கட்டத்தில் அதே கட்டிடத்தில் தவிர்க்கவே முடியமால பெரிய இட வசதியோடு அதே கட்டிடத்தில் இடம் மற்ற அவசியம் உண்டாகி செலவுத்தொகை கைக்கு மீறி போன போது ஈடுகட்ட திரைக்கதை நடிப்பு குறும்பட பயிற்சி பட்டறைகள் நடத்தி சமாளித்துக்கொண்டேன் . இப்படியே தொடர்ந்தாலும் எனக்கு ப்ரச்னைஇருக்காது . ஆனால் நூலகம் என்பது வெறும் நூலகம் மட்டுமே அல்ல . நான் துவக்க விழாவில் குறிபிட்டது போல தமிழ் சினிமாவுக்கான ஒரு அறிவுக்களஞ்சியமாகவும் ஆவணகாப்பகமாகவும் உலக சினிமா தரம் நோக்கி உயர எடுத்துச்செல்லும் படிகட்டாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் காரணமாக அதன் வளர்ச்சி அவசியமானது என காத்திருந்தேன் .

நன்கொடை என இணைய தொடர்புகளில் மடிவிரித்தால் கொடுக்க பலர் தயார் என்றாலும் நான் அதில் பிடிவாதமாக மறுத்திருந்தேன் காரணம் இது தனித்த சிந்தனை ரசனை சார்ந்த விடயம் . இந்த உணர்வு இல்லாதவர்கள் தரும் பணம் நம் செயல்பாடுகளை கட்டுபடுத்தும் என்ற எண்ணமே அதற்கு காரணம் . இந்நிலையில் தான் வெற்றி மாறன் அவர்கள் இப்படி சொன்னதும் சட்டென தலையசைத்து அவரோடு இணைந்து பயணிக்க முடிவெடுத்தேன் . இன்னும் சொல்லப்போனால் இந்த விஷயங்களை முன்னெடுக்க என்னைவிட கூடுதல் தகுதி கொண்டவர் . நானாவாது உதவியாளர் கூட இல்லை . இந்த விடயத்தில் என்னை விடவும் கூடுதல் பொறுப்பு மிக்கவர் மட்டுமல்லாமல் என்னைவிடவும் தமிழ் சினிமா குறித்தும் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும் அக்கறை மிக்கவர் . அவரோடு இணைவது தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் பாலு மகேந்திரா நூலகம் மூலம் மிகப்பெரிய பணிகளை செய்யமுடியும் என்ற நம்பிக்கை உருவாகிறது .

இந்த இரண்டு வருடங்களில் 40க்குமேற்பட்ட மேட்ச் பாக்ஸ் மீட் மூலம் பல கலைஞர்கள் எங்கள் சிறிய இடத்தில் வந்து விதைகளை தூவியிருக்கின்றனர். பதினைந்துக்கும் மேபட்ட திரையீடுகள் பல பயிற்சிப் பட்டறைகள், கதை சொல்லும் நிகழ்வுகள் நாடக ங்கள் வாசிப்பு மராத்தான் போன்றவை நடத்தியிருக்கிறோம் . கோவா திரைப்பட விழாவுக்கு பயண ஒருங்கிணைப்பு மற்றும் சென்னை திரைப்பட விழா வுக்கு சிறப்பு சலுகை போன்றவற்றை வெற்றிகரமாக செயல் படுத்தி வந்துள்ளோம் .இவையனைத்துமே உறுப்பினர்களின் ஆர்வம் ஈடுபாடு மற்றும் நூலகத்திற்காக சக்கரம் போல ஓயமால் உழைத்த என் முன்னாள் உதவியாளர்கள் தவசீலன் , ஜேம்ஸ் அபிலாஷ் தற்போது பொறுப்பிலிருக்கும் திருநாவுக்கரசு எப்போதும் ஊக்குவிப்பதோடு நில்லாமல் கைகொடுக்கும் மருது மற்றும் டிசைனர் இளங்குமரன் , தன்னார்வலர்கள் கணேஷ் மணிகண்டன், புவனேஷ்வர், அருண் பாண்டியன் , கணேசன், தினேஷ் , க்ருஷ்ணன் , அருண, மனோஜ் . வெங்கட் பாலன் மற்ரும் சூர்ய பிரகாஷ் இன்னும் விடுபட்டுப்போன பலரையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன் வரும் பிப்ரவரி 13 அன்று காலை 9 மணிக்கு வளவசரவாக்கம் நான்காவது தெரு அன்பு நகர் ( வெற்றி ,மாறன் அலுவலகம் அருகே புதிய வளாகத்தில் உங்கள் அனைவரையும் வரவேற்க காத்திருக்கிறேன் பெரிய இருப்பிடத்துகேற்ற நூல்களின் தேவை அதிகம் . உங்கள் அனைவரிடமும் நூலக சேவையில் கைகோர்க்கும் விதமாக புத்தகங்களை கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் கடந்த 18 19 ஆண்டுகளில் வெளியான புதிய நூல்கள் கிடைத்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி . நூல்களை கொடையாக அளிக்க விரும்புவோர் 9884060274 எனும் எண்ணுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் – அஜயன் பாலா

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.