மிக முக்கியம் அவசியம் படிங்க… இது புதிய ஏமாற்று முறை – கவனம்

மார்கெட்டில் இது ஒரு புது fraud…

அது ஒரு திங்கள்கிழமை, ராஜேஷ் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தான். 3 தடவை மனைவியிடம் இருந்து போன், 4வது தடவை எடுத்தான்.

எதுக்கு இப்ப இத்தினி வாட்டி அடிக்கிற…உனக்கு அறிவில்லை என்றான் எரிச்சலாக.

மறுமுனையில் மனைவியின் நம்பரில் இருந்து ஒரு ஆண் குரல்..ராஜேஷ் சார்ர்ர்ர்ரா பேசறது?

ஆமா நீங்க…?

சார்…நான் அசோக் நகர் மசூதி எதிர்தாப்பல இருந்து பேசுறேன்.

சிகப்பு கலர் ஸ்கூட்டில வந்த மேடம் அடிபட்டுடாங்க சார்…உங்க wifeஆ சார்… என்று கேட்கும் போதே இவனுக்கு நெஞ்சு படபடத்தது.. மூளை ஸ்தம்பித்தது.

ராஜேஷ்க்கு புரிஞ்சு போச்சு…

அவர்கள் பையன் ஜவகர் வித்யாலயா ஸ்குலா தான் படிக்கிறான். மனைவி பையனை கூட்டிட்டு வர வண்டியில் போகும் போது ஆக்சிடண்ட் ஆகியிருக்கிறது என்று புரிந்தது.

ஐய்யோ ஆண்டவா..அவள மட்டும் திருப்பிக் கொடுத்துடு… அவகிட்ட பாசமா இருக்கேன். இனிமேல் திட்ட மாட்டேன்..அன்பா இருப்பேன்….

ராஜேஷ்: இப்ப எங்க சார் அவங்க? என்றான்.

அந்த ஆள்: பில்ரோத் கூட்டிட்டு போயிட்டு இருக்காங்க சார். என் கிட்ட போன் கொடுத்து ராஜேஷ் என்று மட்டும் தான் சொன்னாங்க. அப்புறம் மயங்கிடாங்க சார். கால்ல நல்ல அடி சார். நிறைய ரத்தம் வேற சார்… சீக்கரம் அங்க வந்துடுங்க சார்.

தோ…உடனே வரேன் சார் என்று ஒடினான் ராஜேஷ்.

கீழே வந்து காரை ஸ்டார்ட் பண்ணறதுகுள்ளேயே மறுபடியும் போன் அவள் நம்பரில் இருந்து… அதே நபர்.

சார் சொல்லுங்க என்றான்…

ராஜேஷ் சார்..கொஞ்சம் காசு இருந்தால் அனுப்பி வையுங்க சார். மேடம் கிட்ட காசு இருக்கோ இல்லையோ… மேடம் வேற மயக்கத்தில் இருக்காங்க… அதனால treatment delay பண்ணக் கூடாது சார்.

எப்படி சார் பணம் அனுப்பறது…நான் கிளம்பிட்டேன் ஆபிஸ்லிருந்து. ஆன்லைனில் அனுப்புவதற்கு குறைந்தது அரை மணி நேரம் ஆகும் சார்..

சார் உங்களிடம் PAYTM / Gpay இருக்கா?

உங்க friends கிட்டச் சொல்லி அனுப்பச் சொல்லுங்க சார் நான் என் நம்பரை மெசேஜ் பண்ணுறேன் என்றான்.

சரி அனுப்புங்க என்றான்.. அதுக்குள்ள நண்பனைக் கூப்பிட்டு விஷயத்தை விளக்கி பணம் அனுப்ப சொல்லிவிட்டான்.

பில்ரோத் ஆஸ்பிட்டல் பக்கத்தில் வந்து விட்டது. ஆண்டவா அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது. ஐய்யயோ பையனுக்கு என்ன ஆனதுனு சொல்லவே இல்லையே என்று புலம்பிக் கொண்டு உள்ளே ஒடினான்.

Hospital Reception: மேடம்…மேடம்..

பிரியானு ஒரு பேஷண்ட் இப்ப தான் அட்மிட் பண்ணியிருப்பாங்க.. ஆக்ஸிடென்ட் கேஸ் மேம்… ப்லீஸ் எங்க இருக்காங்க மேம். பதறினான் ராஜேஷ்.

Reception lady: ப்ரியாவா ? அப்படியாரும் வரல சார்… இன்னும் சொல்லப் போனா.. ஆக்ஸிடன்ட் கேஸ் எதுவும் காலையிலிருந்து வரலியே சார்.

என்னடா இது..ஓரே குழப்பமா இருக்கு என்று பிரியா நம்புருக்கு திருப்பி அடித்தான்…

இரண்டாவது ரிங் அடிக்கறதுகுள்ளே.. போனை எடுத்து சொல்லுங்க என்றாள் ப்ரியா.

என்னடி சொல்லுறது…?

எப்படி இருக்கே.. என்ன சொல்லுறாங்க டாக்டர்ஸ் என்றான்.

என்னங்க சொல்லுறீங்க ஒன்னும் புரியல. நான் வீட்டுல தான் இருக்கேன். உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சா.. இப்ப எங்க இருக்கீங்க என்றாள்.

இருடி நான் திருப்பிக் கூப்பிடுகிறேன் என்று போனை கட் செய்தான்.

அப்புறம் ராஜேஷ் ஓடிப் போய்க் கட்டி புடிச்சு அழுது…. நடந்தது எல்லாம் சொல்லி… இப்ப முன்னை விட இப்ப நல்லா தான் இருக்காங்க.

இந்தக் கதையை ராஜேஷ் என்னிடம் சொல்லும் போது சம்பவம் நடந்து இரண்டு வாரம் இருக்கும்.

ராஜேஷ் என்னிடம் கேட்டது இரண்டு கேள்வி தான்.

எப்படி என் மனைவி போன்லிருந்து என்னைக் கூப்பிட்டான் அந்த நபர்? அவனுக்கு எப்படி என் மனைவி போற ரூட் தெரிந்தது..அதுவும் எனக்கு சந்தேகம் வராத மாதிரி பேசி பத்தாயிரம் ருபாய் என்னை வைத்தே அவன் கணக்குக்கு அனுப்ப வைத்தான் என்றான்.

நீங்க தான் அதற்குப் பதில் சொல்லிட்டீங்களே ராஜேஷ்… உங்கள கொஞ்சம் நேரம் சிந்திக்க விடாம பண்ணி உங்கிட்ட காசு அடிச்சுட்டான்.

அவனுக்கு கண்டிப்பா உங்களப் பற்றியும், உங்க குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து இருக்கு. மேலும் அவன் தான் செஞ்சு இருக்கனும் என்று அவசியம் இல்லை. நீங்கள சில சமயம் Facebook ல சொல்லிருக்கலாம்..status போட்டு இருக்கலாம்.

இயன்றவரை சமூக வலைதளைத்தில் எல்லாத்தையும் வாந்தி எடுக்காதீங்க.

ராஜேஷ்: அப்போ அந்த போன் கால்?

அது ரொம்ப சிம்பிள். Play store la நிறைய apps இருக்கு. Fake ID, Caller masking, Fake calls..அப்படி நிறைய.

உங்களுக்குத் தெரியாம. உங்க மொபைல் நம்பரில் இருந்து பண்றமாதிரியே கால் பேசவும் முடியும், மெசஜ்ம் அனுப்ப முடியும்.

இதில் என்னன்னா.. கால் தான் பண்ண முடியும், கால்ஸ் ரிசீவ் பண்ண முடியாது.

நீங்க உங்க மனைவிக்கு உடனே கால் பண்ணியிருந்தா ஏமாந்து இருக்க மாட்டிங்க. ஆனால்…அவன் உங்களை சிந்திக்க விடாம..அவனே தொடர்ந்து பேசியிருப்பான் என்றேன்.

ஆமா சார்…2 நிமிஷத்துக்கு ஒரு தடவை எங்க இருக்கிங்க..சீக்கிரம் வாங்க…ஜாக்கிரதையா வாங்க என்று பேசிகிட்டே இருந்தான் சார் என்றார்.

இதில் நமக்குப் பாடம் என்னானா…சிக்கலான சூழ்நிலையில் பதட்டம் ஆகாதீங்க, சமுக வலைதளைத்தில் எல்லாத்தையும் கொட்டாதீங்க, தெரியாதவர்களை நட்பு வட்டத்தில் சேர்க்காதீர்கள்….நிறைய சொல்லலாம்… But நீங்களும் கொஞ்சம் யோசிங்க.

நீங்கள் கேட்கலாம், அந்த போன் நம்பரை போலீசில் கொடுத்தால், கண்டு பிடித்து கொடுக்க மாட்டார்களா என்று…பத்து ஆயிரம் ரூபாய்க்காக பத்து நாள் அலைய முடியுமா?

நம்ம ஊரில், சில்லறை வாங்காமல் காரியம் நடக்காது? பத்து ஆயிரம் திருட்டுக்கு எவுவளவு செலவு செய்வீர்கள். இதைத் தான் அவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்…

வாட்ஸப் பகிர்வு

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.