கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடே குழம்பிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் இயக்குநருமான விசு, சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார். கடந்த சில வருடங்களாக சிறுநீரகம் பழுதான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் விசு. இன்று சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். திரையுலகம் அவரது இழப்பிற்காக வருந்தி நிற்கிறது.

நடிப்பது மட்டும் அல்லாது எழுத்தாளர், இயக்குனர், நாடக நடிகர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் தான் விசு. 1945ஆம் ஆண்டு பிறந்த விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன்.

இவர் முதன்முதலில் பாலசந்திரனிடம் துணை இயக்குனராக பணியாறினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் தில்லு முல்லு அந்த படத்தில் இவர் டப்பிங்கும் செய்துள்ளார். குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின் கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்குனாராக அறிமுகமாகினார். மேலும் மணல் கயிறு, சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் விசு.

இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் தங்கமணி ரங்கமணி. 72 வயதாகும் விசு சீரியல்களில் நடித்ததோடு அரட்டை அரங்கம் என்கிற டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். உமா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்ட விசுவிற்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில்லாகி விட்டனர்.

பின்னாளில் வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.