பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

53 வயது இர்பான் கான், 2018-ல் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். லண்டனில் இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு குடல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்காக இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். 

1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார் இர்பான் கான். 2017-ல் இவர் நடித்து வெளியான ‘ஹிந்தி மீடியம்’ படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது. 2011-ல் ‘பான் சிங் தோமர்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

அவரின் மறைவு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகேஷ் ஜவடேகர், “மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் இர்பான் கான். அவரின் இறப்பு செய்தி கேட்டு வருத்தமடைகிறேன். அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 Prakash Javadekar@PrakashJavdekar

Irfan Khan was a versatile actor. Sorry to hear about his demise. My heartfelt condolences to his family, friends and fans. Om Shanti9,163Twitter Ads info and privacy1,215 people are talking about thisSmriti Z Irani@smritiirani

He etched every character in our memories with sheer talent. From the passion of Pan Singh Tomar to a floundering father in Angrezi Medium #IrrfanKhan was an actor to behold. How do you mourn his passing away for he breathes in the characters he left behind .. Om Shanti 🙏6,263Twitter Ads info and privacy762 people are talking about this

அவரைப் போலவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், “இர்பான் கானின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நம் காலத்தின் மிகத் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் அவர். அவரின் பணி எப்போதும் நினைவில் கொள்ளப்படட்டும். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்,” என இரங்கல் தெரிவித்துள்ளார். Arvind Kejriwal@ArvindKejriwal

Shocked to hear of the demise of Irrfan Khan, one of the most exceptional actors of our time. May his work always be remembered and his soul rest in peace31.8KTwitter Ads info and privacy4,336 people are talking about this

ராகுல் காந்தியும், “இர்பான் கானின் இறப்புச் செய்தி கேட்டு வருத்தமுற்றேன். பன்முகத்தன்மை வாய்ந்த திறமையான நடிகர் அவர். இந்தியா சார்பில் சினிமா தூதராக செயல்பட்டவர் அவர். அவரை நாம் மிஸ் செய்வோம். அவரின் குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என ட்வீட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இர்பான் கானின் அம்மா சாயிதா பேகம் உயிரிழந்தார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல், போனிலேயே அம்மாவின் இறுதி சடங்கை பார்த்து இன்பான் பதான் அழுதார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.