அம்பேத்கர் ராவணன் சார் எழுதியது போக படத்தில் வேறு ஒன்றும் இருந்தது. ஷோபனா. சின்ன வயசில் இருந்தே பல பேரைக் காதலித்திருக்கிறாள். விவாகரத்து வாங்கியிருக்கிறாள். வீட்டில் கல்யாணம் ஆகப் போகிற பெண்ணை வைத்துக் கொண்டு மேஜரைப் பார்த்ததும் இமிமீடியாட்டாக லவ் பண்ணுகிறாள். மகள் தான் குழம்புவாளே தவிர தனது தீர்மானத்தில் இருந்து இவள் அசைவதே இல்லை. படத்தில் கடைசிக் காட்சியில் மகளும் அவள் காதலனும் ட்ரிப் போக இவள் தனது காதலனுடன் நகருக்கு இறங்குவாள். எவ்வளவு தூரம் நமது சினிமா சம்பிராதாயங்களில் இருந்து நகர்ந்த ஒரு புதியது?

இது பல சூரப்புலிகளுக்கு காண்டு என்பது ஒரு பக்க உண்மை. அப்புறம் எந்த படத்துக்கும் இல்லாத பதிவுகள் பெண்களிடம் இருந்தே வந்து கொண்டிருந்தன என்பது ஒரு டிங் டாங்க்.

கடைசியாக ஒரு விஷயம். இப்படம் ஒன்றும் மகத்தான படமில்லை. ஆனால் பிஜேபி போலவே இந்த கார்னர் பண்ணுகிற வாழ்வு பற்றியதே எனது வியப்பு. பிறப்பால் மலயாளிகள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதாக எவ்வளவு கட்டுரைகள்? ஈழ துரோகத்தில் 90 சதவீதம் தமிழர்களும் பிற மாநிலத்தவர் 10 சதவீதம் என்றால் அதில் எத்தனை சதவீதம் மலயாளிகள்? ஒன்று சொல்ல வேண்டும், எந்த அரசியல் மயிரும் இல்லாமல் எனக்கும் பிரபாகரன் தான் தலைவன். அவர் சாவது வரை அத்தனை கலக்சன் தலைவர்களுக்குப் பின்னாலும் வெறி கொண்டு ஓடியிருக்கிறேன். அவரை மலினபடுத்துவதற்கு எந்த சினிமா நாயினால் முடியும் என்று நம்புகிறீர்கள்? ஆனால் இப்போது முற்றிலுமான இனவெறி பொங்கல் வைப்பவர்கள் அதை செய்ய தான் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

முகநூலில் மணி எம்கேமணி Mani Mkmani.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.