📌 இது ஏதோ கூட்டல் கணக்கு அல்ல நம் எதிர்கால ஏழை சந்ததிகளின் கல்வியைப் பறிக்கும் குலக்கல்வி கணக்கு.

📍 புதிய கல்விக் கொள்கை 2020.📍

Pre kg
LKG
UKG
1st
2nd

📌 மொத்தம் 5 வருட தொடக்கக் கல்வி.

3rd
4th
5th

📌 பிறகு நாடு முழுவதும் 5 -ம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு.

6th
7th
8th

📌 பிறகு நாடு முழுவதும் 8 -ம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு.

9th
10th
11th
12th

📌 இவற்றில் 10, 11,12 ஆண்டுதோறும் ஒரு பொதுத்தேர்வு.

📌 இத்தனை பொதுத்தேர்வுகளையும் தாண்டினால் தான் கல்லூரிக்குள் நுழைய முடியும்.

📌 கல்லூரிக்குள் நுழையவே ஒரு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்..

📌 18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகள் தான்.

📌 12-ம் வகுப்பு மாணவன் 17 வயதுக்குள் இத்தனை தேர்வுகளை எழுதித் தான் கல்லூரிக்குள் நுழைய முடியுமா?.. வேண்டுமா???…

📌 நம் நாடு ஏழைகளை மட்டுமே கொண்ட ஒரு நாடு.

📌 இங்கே மூன்று வேளையில் ஒரு வேளை உணவு சாப்பிடாமல் தூங்கும் குடும்பங்கள் தான் அதிகம்.

📌 அவர்களின் குழந்தைகளைப் படிக்க பள்ளிக்கு அனுப்புவதே தங்கள் குழந்தைக்கு மதிய உணவு கிடைக்கும் என்று தான்.

📌 அப்படிப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து ஊக்கப்படுத்த இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகம், இலவச லேப்டாப், இலவச சைக்கிள், இலவச செருப்பு,இலவச பஸ்பாஸ் என்று ஏராளமாக கொடுத்தது தான் நம் திராவிடம் கடந்த 50 வருடங்களாக கல்விக் கொள்கையில் சாதனைகள் செய்து வருகின்றன.

📌 அதைத்தான் தற்போது மாற்ற முயற்சிக்கின்றார்கள்.

📌 தங்கள் குழந்தைகள் தங்களை போன்று அல்லாமல்…

📌 படித்து பெரிய டாக்டராகவோ, கலெக்டராகவோ, வக்கீலாகவோ ஆக வேண்டும் என்பது தான் ஒவ்வொரு பெற்றோரின் கனவு.

📌 நிற்க!!.

📌 8-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடையும் ஒரு ஏழை மாணவன் தன் சக நண்பர்களால் கேலி செய்யப்பட்டால் அவன் மீண்டும் பள்ளிக்கு வராமல் போகலாம்.

📌 இருமுறைக்கு மேல் தோல்வியடைந்தால் பெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல் தாங்கள் என்ன தொழில் செய்கின்றனரோ அதே வேலையை பார்க்க அழைத்துச் செல்வார்கள்.

📌 உதாரணமாக முடி வெட்டுபவரின் மகன் சலூன் கடைக்கு சென்று முடி வெட்ட கற்றுக் கொள்வான். பிறகு அந்த வயதில் கொஞ்சம் காசு பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.

📍 அதன் பிறகு அந்த குழந்தை படிப்பதை நிறுத்தி விடும். இதற்கு பெயர் தான் குலக்கல்வி என்று பெயர்.📍

📌 நம் நாட்டில் பெரும்பான்மையான ஏழைகள் சூத்திர பஞ்சமர்களே!!

📌 அவர்களின் குழந்தையின் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டால்…

📌 பிறகு கல்லூரிக்குச் செல்ல ஆள் இருக்க மாட்டார்கள்…

📌 அல்லது போட்டியாளர்கள் குறைக்கப்படுவார்கள்.

📌 இதன் மூலம் பணக்கார வர்க்கத்தின் உயர்சாதியினர் மட்டுமே படிக்க வாய்ப்புக் கிடைக்கும்.

📌 ஏற்கனவே கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் ஏழைகள் இனி கல்வி கற்கவே முடியாத நிலை ஏற்படும்.

📌 தரத்தை கூட்டுகின்றேன் என்று போட்டியாளர்களை குறைப்பதே அவர்களின் நோக்கம்..

📌 கற்கை நன்றே!..
கற்கை நன்றே!!..
பிச்சை புகினும் கற்கை நன்றே!!..
என்ற வார்த்தைகள் இனிவரும் காலங்களில் காணாமல் போகலாம்.

📌 ஏனெனில் இனிமேல் பிச்சையெடுத்தெல்லாம் கல்வி கட்டணம் நம் நாட்டில் செலுத்த முடியாது..

📍 ஏழையா பொறந்த உனக்கெதுக்குடா படிப்பு என்று அரசே கேள்வி கேட்பது போல் உள்ளது.!!📍

📌 எனக்கு ஐந்தாம் வகுப்பு வரை ABCDEF யை தவிர ஆங்கிலத்தில் எதுவும் படிக்க தெரியாது.

📌 ஆனால்..

📌 பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.

📌 இன்று போல் ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதியிருந்தால்??….

📌 அன்றே என் பள்ளிப்படிப்பு முடிந்திருந்தாலும் முடிந்திருக்கலாம்.

📌 இதை ஏன் கூறுகின்றேன் என்றால் ஒரு குழந்தை 5 ம் வகுப்பில் படிக்காதது 8 ம் வகுப்பிலிருந்து நன்றாக படிக்கும் 8 ம் வகுப்பில் படிக்காத குழந்தை பத்தாம் வகுப்பில் நன்றாக படிக்கும்….

📌 எனவே…

📌 அவர்களை பிஞ்சிலேயே கல்வி கொள்கை( கொள்ளை ) என்ற பெயரில் கசக்கி பிழிவது சரியல்ல!!..

📌 அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே உள்ளது போல் 10,12 ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தினால் போதும்.

பகிர்வு

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.