GDP என்றால் என்ன ? ஒரு நாட்டில் ஒரு ஆண்டு காலத்திற்குள் உருவாக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு தான் ஜிடிபி என்கிற அளவுக் குறியீடு.
இந்த அளவுக் குறியீடு எவ்வாறு உலக அளவில் நாடுகளின் பொருளாதாரங்கள் ஒப்பிடப் பயன்படுகிறது என்பதை விளக்குகிறார் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன்.
இந்த ஜிடிபியின் நிறை குறைகள், அளவீட்டு முறைகள் பற்றி விவரித்த பின் ஜிடிபி அளவீட்டின் படி இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய -23.5% வீழ்ச்சியான நிலையை அலசுகிறார்.
இந்தியாவின் ஜிடிபியின் 60 சதவீதத்துக்கும் மேல் தனி நபர்கள் செய்யும் செலவினால் உருவாக்கப்படுகிறது. பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொரோனா தனி நபர்களிடம் உள்ள பணத்தைப் பிடுங்கி விட்டது. இது மேலும் பொருளாதாரத்தை முடக்கவே செய்யும்.