சில தினங்களுக்கு முன்பு துபாய்க்கு சிகிச்சைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்தின் ஒரு துண்டு வீடியோவைப் பதிவிட்டு ‘அய்யக்கோ கேப்டனின் உடல்நிலை இவ்வளவு மோசமாகவா இருக்கிறது. அவர் எவ்வளவு பரிதாபமாக இருக்கிறார் பாருங்கள் என்று சில இணையதளங்களில் ‘உச்’ கொட்ட வைத்தனர்.

அப்பயணத்தின்போது அவரது மகன் மட்டும் உடனிருக்க, அவரது மனைவி உடன் செல்லாதது குறித்து சில விமர்சனங்களும் எழுந்தன. அதற்கு அடுத்த நாளே தனது பாஸ்போர்ட்டில் ஒரு சட்டச் சிக்கல் இருப்பதை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த், அதை ஒரே நாளில் சரி செய்து கணவரை நோக்கி பயணித்தும் விட்டார்.

இந்நிலையில் துபாய் சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆனவுடன் ஜம் என்று தேறிவிட்ட கேப்டன் டிவிட்டரில் தன் உடல்நிலை பற்றி அப்டேட் கொடுத்துள்ளார்…அதில்

Am doing well. Watching ‘Satriyan’ movie, with Sisters who taking care of me.

நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த
‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்….என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சை முடிஞ்சி திரும்பி வர்றப்ப சத்ரியன் விஜயகாந்த் மாதிரியே பழைய பன்னீர்ச்செல்வமா ஸ்டைலா திரும்பி வாங்க கேப்டன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.