ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம். 🐒

ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகள வாங்க வந்தானாம் ! 🐵

ஒரு குரங்க 100 ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சனாம்.🙊

அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவன பைத்தியம்னு நினைச்சாங்களாம்.🙄

யாராச்சாம் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்க காசு கொடுத்து வாங்கிவாங்களாம்னு யோசிச்சாங்களாம்.🤔

இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, சில குரங்குகளை புடிச்சு வியாபாரிக்கிட்ட கொடுத்து , அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம். 😬

இந்த சேதி காட்டு தீ மாதிரி பரவ, நிறைய பேர் குரங்கு புடிக்கிற வேலையில இறங்குனாங்களாம். 😬

கொஞ்ச நாள் கழிச்சு, அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய் தரதா சொன்னானாம். 😉

அது வரை சோம்பேறித்தனமா வீட்டுலயே இருந்தவங்களும் உடனே குரங்கு புடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். 🐒

பாக்கி இருக்கிற குரங்குகள எல்லாம் பிடிச்சு 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமே தான் வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி😯

ஜனங்களுக்கு தூக்கம் எல்லாம் போச்சு ! ஊருல மிஞ்சி இருக்குற அஞ்சாறு குரங்குகளையும் தேடிப் புடிச்சி வித்து, ஒன்னுக்கு 500 ரூபாய் வாங்கினாங்களாம். 🙊

வியாபாரி அடுத்து என்ன அறிவிப்பு விடப்போறான்னு மக்கள் ஆர்வமா காத்திருந்தாங்க.😉

ஒரு வாரம் தான் ஊருக்கு போறதாவும், திரும்பி வந்ததும் ஒரு குரங்க 1000 ரூபாய்க்கு வாங்கிக்கிறதாகவும் சொன்னான் வியாபாரி. 😉

அதுவரை, தன் வேலைக்காரன கூண்டில இருக்கிற குரங்குகளை எல்லாம் பாத்து பராமரிக்க சொல்லிட்டு, தன்னோடு ஊருக்கு போனானாம் வியாபாரி. 😉

இனிமை பிடிச்சு வித்து 1000 ரூபாய் வாங்குறத்துக்கு ஒரு குரங்குக்கூட மிச்சம் இல்லையேன்னு மக்களுக்கு ஒரே கவலை. 😞

அதைப் பார்த்த வியாபாரியோட வேலைக்காரன், ஜனங்களுக்கு ஒரு குரங்க 700 ரூபாய்க்கு தான் விக்கிறதா சொன்னானாம். 😉

காட்டுத் தீ மாதிரி செய்தி பரவிச்சு. வியாபாரி 1000 ரூபாய்க்கு குரங்கு வாங்கினா, எப்படியும் தங்களுக்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கும்னு யோசிச்சாங்க ஊர் ஜனங்க. 😬

அடுத்த நாள் கூண்டில அடைஞ்சு இருக்கிற குரங்குகள வாங்க பெரிய வரிசை காத்திருந்துச்சு. 🐵🤑

ஒரு குரங்க 700 ரூபாய்க்கு வியாபாரியோட வேலைக்காரன் வித்தான். பணக்காரங்க நிறைய குரங்குகள வாங்க, ஏழைங்க கடனவுடன வாங்கி, கொஞ்சம் குரங்குகள வாங்குனாங்களாம். 🙊

குரங்குகள எல்லாம் பத்திரமா பாத்துக்கிட்ட ஜனங்க, அந்த வியாபாரி மறுபடியும் எப்போ ஊருக்கு வருவான்னு காத்திருந்தாங்களாம். ஒரு வாரமாச்சு.. ஒரு மாசமும் ஆச்சு..🤑

யாருமே வரல ! வியாபாரியும் வரல.

😳 வெறுத்துப் போன எல்லாரும் அந்த வியாபாரியோட வேலைக்காரனைப் போய் பாத்து என்னாச்சுன்னு விஷயத்தை கேக்க ஓடினாங்க. 🙄

ஆனா வேலைக்காரன் எப்பவோ ஊரை காலிப்பண்ணி ஓடிப் போயிருந்தான் ! 😉

அப்பதான் ஊர் ஜனங்க, ஒன்னுக்கும் பிரயோஜனப்படாத குரங்குகள 700 ரூபாய் கொடுத்து வாங்கி, விக்க முடியாத நிலைமையில இருக்கோம்னு உணந்தாங்க. 😭

இந்த வியாபாரத்துக்கு பேருதான் ‘ பங்குச் சந்தை ’

இந்த குரங்கு வியாபாரத்தில சொற்ப ஆட்கள் தான் பணக்காரங்க ஆக முடியும்.
பெரும்பாலான ஆட்களுக்கு குடிதான் மூழ்கிப்போகும். 🐒😉😅

– வாடஸப் வரவு

🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.