செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது ஹாரர் திரைப்படமான டீமன். அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின், அபர்ணதி, ‘ கும்கி ‘ அஸ்வின், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக இருக்கும் இப்படத்தை ஆர். சோமசுந்தரம் தயாரிக்க, பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் B. யுவராஜ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் வெளியிடுகிறார். உடன் இணைந்து வழங்குகிறார் இயக்குநர் வசந்தபாலன்.

படம் குறித்து இயக்குநர் ரமேஷ் பழனிவேல் கூறியதாவது,

இயக்குநர் வசந்தபாலன் சாரிடம் ‘அங்காடித்தெரு ‘ படம் துவங்கி இப்போது வரையிலும் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன்.’ டீமன் ‘ என்னுடைய முதல் திரைப்படம். டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 நபர்கள் ஒன்றாக இணைந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஹாரர் படம் தான் இந்த ‘டீமன்’. மேலும் பல்வேறுபட்ட மர்ம நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஆர் .எஸ். அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரவிக்குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தில் இசைக் கலவை செய்த ரோனி ரபேல் இந்தப் படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். நிச்சயம் இந்த படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிக்கலவை காரணமாகவே சிறந்தத் திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.

ஹாரர் படங்கள் என்றாலே விஷுவலும், பின்னணி இசையும்தான் படத்திற்கு ஆணி வேர், அதை எந்த அளவிற்கு சிறப்பாகக் கொடுக்க முடியுமோ கொடுத்திருக்கிறோம். எப்போதுமான பெரிய பங்களா, நட்சத்திர பட்டாளங்கள் என பேய்ப்படங்களுக்கே உரிய வழக்கத்தை உடைத்து , ஜனரஞ்சகமான நகரம், அதில் ஒரு அபார்ட்மென்ட் அதில் நடக்கும் அமானுஷ்யங்கள் என இப்படம் நிச்சயம் மற்ற பேய்ப் படங்களில் இருந்து வேறுபடும். என்றார் இயக்குநர் ரமேஷ் பழனிவேல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.