அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக கோர்ட்டில் தண்டனை பெற்ற நான்கு பேரின் தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும், அவர் உயிரிழந்த போதும் சசிகலா பரோலில் வெளியே வந்து அவரைப் பார்த்துவிட்டு மீண்டும் சிறை சென்றார்.
இந்த நிலையில், சசிகலாவின் விடுதலை தொடர்பான அறிவிப்பை கர்நாடக சிறைத்துறை தற்போது வெளிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஆக. 14-ம் தேதி சசிகலா விடுதலையாவார் என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டிவிட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஸோ, சின்னம்மா ரிட்டர்ன்ஸ் என்பது உறுதியாகிறது. இனி சேலத்துப் பாடிகளும் டீக்கடை ஓனர்களும் பழைய பஸ்கி எடுக்கும் பொசிஷனை மெய்ன்ட்டெய்ன் செய்வார்களா ? இல்லை தாமரை ஜூஸ் குடித்த எபெக்டில் நிமிர்ந்து நிற்பார்களா ? ஒருவேளை சின்னம்மாவும் கொஞ்சம் கபசுர நீர் சாப்பிடுவாரா ?
எல்லாம் சௌக்கிதாருக்கே வெளிச்சம்.