கொரானா காலத்திற்குப் பிறகு இரண்டு நல்ல திரைப்படங்களை பார்த்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டு திரைப்படங்களும் எளிய மனிதர்களுடைய கனவுகளைப் பற்றி பேசியிருக்கிறது.
முதல் திரைப்படமான…ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய ‘சிம்பிள் ஃப்ளை’ நூலை அடிப்படையாகக் கொண்டும் #சூரரைப்_போற்று படத்தை உருவாக்கிய இயக்குநர் சுதா கொங்கரா.
நெடுமாறன் ராஜாங்கமாகவே வாழ்ந்த சூர்யா, பொம்மியாக நடித்த அபர்ணா
உறியடி வசனங்களால் தெறிக்கவிட்ட விஜயகுமார். மற்றும் படக்குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் முழுக்க சூர்யா கண்களில் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டே இருக்கிறார். ஏரோப்ளேனில் ஒரு முறையாவது பயணித்து விடவேண்டும் என்ற ஆசை இல்லாதவர்களே இல்லை. எனக்கும் அந்த ஆசை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. சென்னை விமான நிலையத்திற்கு சென்று எட்ட நின்று விமானங்களை ரசித்து வருபவர்கள் நம்மிடையே யாராலும்… அதில் நானும் ஒருவன்.
ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை”. ”நீங்க யார் மாறன், உனக்குல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ். பேசாம ஊருக்குப் போய் மாடு மேய்க்கிற வேலையைப் பாரு”
“வானம் என்ன உங்க அப்பன் வீட்டு
சொத்தா ங்கொத்தா” போன்ற வசனங்களும் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. சூரரைப்போற்று என்ற படத்தின் பெயரைப் போலவே படத்தின் கதை மாந்தர்களின் பெயர்கள் நெடுமாறன் ராஜாங்கம், பொம்மி, காளி மற்றும் சே கம்பீரமாக நிற்கின்றன. சூரரைப் போற்றுதல் மட்டுமல்ல திரைப்படத்தை எளிய மக்களிடம் கொண்டு செல்வதே படத்திற்கு நாம் செய்யும் மரியாதையாகும்.
இரண்டாவது படமான #மூக்குத்தி_அம்மன் படத்தின் பெயரை கேட்டவுடனே இந்த 2020இல் இது போன்ற பெயர்கள் வைப்பார்களா என்ற குமட்டலாக இருந்தது. அதுவும் நம் பொதுப்புத்தியில் கடவுள் என்றாலே ராமர்,விஷ்ணு,பெருமாள்,கணபதி மற்றும் சரஸ்வதி, லட்சுமி நம் நினைவுக்கு வருவதும் நம் கௌரவத்திற்கு உரிய கடவுள்களாகும். படத்தை பார்த்த பிறகு தான் தெரிந்தது மூக்குத்தி அம்மன் திரைப்படம் எங்கெல்ஸ் ராமசாமியின் மூக்குத்தி அம்மனென்று. அனைவரின் குலதெய்வங்கள் பெயர்களும் அடங்கிய திரைப்படங்கள் வெளிவர வேண்டும்.
‘மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், மக்களின் அபினியாக உள்ளது’என்றார் மார்க்ஸ்.
மதவெறியை எதிர்த்து நடைபெறும் பலமுனை போராட்டங்களில் மத நம்பிக்கையாளர்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை கலந்துரையாடல் மூலம் மூக்குத்தி அம்மன் நமக்கு உணர்த்துகிறது.
கார்ப்பரேட் சாமியார்களையும், மக்களின் மூட நம்பிக்கைகளையும் ஒழிக்க கருத்தியல் ரீதியான போராட்டங்களை பண்பாட்டு தளங்களில் நாம் இன்னும் கூர்மையாக கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
பழமைவாத கருத்துகளை பேசாமல் பெண்களுக்கு தேவையான எதார்த்தத்தை பேசிய மூக்குத்தி அம்மனை நாம் கொண்டாடலாம்.
படக்குழுவினர்களுக்கு
வாழ்த்துக்கள்
.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் மக்களின் சூப்பர்ஸ்டார் சூர்யாவுக்கும் ஸ்பேஷல்
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்.
‘கடவுளும் மதமும் மனிதர்களை ஆறுதல்படுத்த போதுமானதாகயில்லை’ என்று உலகப் புகழ்பெற்ற ரஷ்ய
எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி சொல்லியிருக்கிறார்.
மக்களிடம் உரையாட வேண்டிய நேரம் இது.
— முகநூலில் அமுதன் தேவேந்திரன்.
https://www.facebook.com/devendirandeva.amudhan/posts/694567951198547