பாலா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் எவையும் சரியாக ஓடவில்லை. நாச்சியார் மட்டும் ஓரளவு தப்பித்தாலும், பாலா படம் என்ற முத்திரையை பதிக்காத படம் அது.
இடைப்பட்ட காலங்களில் பாலா சும்மா இருந்தாலும் செய்திகளுக்குப் பேயய்ப் பறக்கிற மீடியா அவர் இவரை வைத்து இயக்குகிறார் அவரை வைத்து இயக்குகிறார். அடுத்த படத்தில் நடிகர்களே ஒரே ஒரு சுவரை மட்டும் வைத்து இயக்குகிறார் என்றெல்லாம் புரளி கிளப்பி வந்தன.
தற்போது ஒருவழியாக, பாலாவின் அடுத்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது என்று ஓரளவு நம்பத் தகுந்த வட்டாரங்கள் நவில்கின்றன.. டிசம்பரில் தொடங்கவிருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார் என்பது ஒரு கூடுதல் தகவல்.
2001 இல் பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்திலிருந்தே சூர்யாவின் திரைவாழ்க்கை டேக் ஆஃப் ஆனது. நந்தாவுக்கு யுவன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் உணர்வுப்பூர்வமாக ரசிகர்களை கட்டிப்போட்டன. பாலா, சூர்யா, யுவன் என்ற அந்த பழைய கூட்டணி மறுபடியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது.
இந்த புதிய படத்தில் நாயகனாக அதர்வாவும், நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. கௌரவ வேடத்தில் சூர்யா நடிக்கலாம் என்கின்றன செய்திகள். இசை யுவன் சங்கர் ராஜா. இதற்குமுன் நந்தா தவிர்த்து பாலாவின் அவன் இவனுக்கும் யுவன் இசையமைத்திருந்தார். இது யுவன் இசையமைக்கும் பாலாவின் மூன்றாவது படம்.
பாலா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் ஓடவில்லை. நாச்சியார் தப்பித்தாலும், பாலா படம் என்ற முத்திரையை பதிக்காத படம் அது. பழைய சேது, நந்தா, பிதாமகன் பாலாவை இந்த புதிய படத்தில் மறுபடியும் பார்க்க முடியுமா என்ற ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் ’ நான் என்ன எடுக்குறனோ அதைப் பாத்துத் தொலைய வேண்டியதுதான…பழைய பாலாவை என்னத்துக்கு தேவையில்லாம தேடுறானுக?’ என்று சலித்துக்கொள்கிறாராம் பாலா.