குப்புற தள்ளிய குதிரை, குழியும் பறித்த கதையாக இருக்கின்றன, சமீபகாலமாக வெளியாகிக்கொண்டிருக்கும் தமிழ்ப்படங்களின் ரிசல்ட்கள்.
‘’அது உங்க தலையெழுத்து ஆனா நாங்க என்ன பாவம்யா பண்ணினோம். இந்த வருஷம் முழுக்கவே மொக்கைப் படமா குடுத்து எங்கள திக்குத் தெரியாம தவிக்க வுட்டுட்டீங்க’’ என்று பக்கத்து மாநிலமான ஆந்திராவிலிருந்து கோரஸாக துக்கக்குரல் கேட்கிறது.
இடையில் ஒன்றிரண்டு தமிழ்ப்படங்கள் ஆந்திராவிலும் சக்கைப்போடு போட்டதிலிருந்து, நம்ம ஆந்திரா பிரதர்ஸ், தமிழ்ப்படங்களை பெரும் விலைகொடுத்து வாங்க ஆரம்பித்தனர்.
அதிலும் குறிப்பாக சூர்யாவுக்கும்,அவரது ;சகுனி’ பிரதர் கார்த்திக்குக்கும் தெலுங்கு மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் ஏறியது.
ஆனால் இந்த 2012-ன் துவக்கத்திலிருந்தே, தமிழ்ப்படங்களை டப்பிங் பண்ண வாங்கிய, ஆந்திராவாலாக்கள் மீது ராகுவும்,சனியும் ரவுண்டு கட்டி விளையாட ஆரம்பித்தனர்.
‘சகுனி’ தாண்டவம்’ அட்டர்ஃப்ளாப் வரிசையில்,கடந்த வெள்ளியன்று ‘பிரதர்ஸ்’ என்ற பெயரில் வெளியான ‘மாற்றானும், ரெண்டாவது காட்சியிலேயே மண்ணைக்கவ்வ, அதை 17 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கிய, பெல்லகுண்டம் சுரேஷ், வெல்லம் தின்ற குரங்கு மாதிரியே ஆகிவிட்டாராம்.
இதையொட்டி’இளமைக்காலங்கள்’ ஜனகராஜாக மாறிய பெல்லகொண்டம் ‘ஊட்டிக்குப் போகாதீங்க’ மாதிரி ‘’அய்யய்யோ தமிழ் பிக்ஷருலா ஒத்தண்டி,ஒத்தண்டி’ என்றபடி பின்னங்கால் பிடறியில் பட ஓட்டமெடுக்கிறாராம்.