துப்பாக்கி படம் ரிலீஸான போது எழுந்த எதிர்ப்புக் குரல்களால் படம் படுத்துவிடுமோ என்று நாமெல்லாம் நினைப்போம்.. ஆனால் படம் சூப்பர் வசூலை அள்ளிக் குவித்திருக்கிறதாம்.
உலகம் முழுதும் ஆயிரம் தியேட்டர்களில் இப்படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியிடப்பட்ட மூன்றாம் நாளே பத்து கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாம்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50 கோடி வசூலாகியிருக்கும் என்கிறார்கள். இது தமிழ்நாட்டில் உள்ள வசூல் கணக்கு மட்டுமே. தெலுங்கு மற்றும் வெளிநாட்டு வசூல் தனி. முருகதாஸ் ஒரு வசூல்தாஸாகி விட்டார்.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர் எதிர்ப்பு தெரிவித்தது போல, தெலுங்கில் இதே போல ஏதோ ஒருவர் படத்தின் மீது ஏதோ வழக்குப் போட்டு பப்ளிஸிட்டி கொடுத்திருக்கிறார்.
படத்தின் வசூல் கலெக்ஷனைக் கண்டு மகிழ்ந்து போன விஜய் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் படக்குழுவினருக்கு தண்ணீராகப்(?) பார்ட்டி விடிய விடியக் கொடுத்தாராம். படத்தின் பாடல்களை எழுதிய கார்க்கி ட்விட்டரில் உற்சாகமாக உளறியது இது.
ஒரு வேளை இந்த எதிர்ப்பு வரணும்னே தான் வேணும்னே ப்ளான் பண்ணினாங்களோன்னு நினைக்காம இருக்க முடியலை. ஏன்னா இஸ்லாமிய எதிர்ப்பு விஷயங்களை நீக்கணும்னா படத்தையே பாதி ஊமைப்படமாத்தான் பாக்க வேண்டியிருக்கும்.
எது எப்படியோ முருகதாஸின் எட்டாம் அறிவு சக்ஸஸா வேலை செஞ்சுடுச்சு.