கே: என்ன கிளியாரே, அடக்க ஒடுக்கமாக பக்கத்து வீட்டுப் பாப்பா போல் இருந்த அஞ்சலியும், பொது நிகழ்ச்சிகளில் ஆபாசமாக உடையணியத் துவங்கி விட்டாரே ? பால்ராஜ், சங்கரன்கோவில்.
கி: சுந்தர்.சி.யின் ‘மசாலா கபே’ கலகலப்பு ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியைத்தானே சொல்கிறீர். அடியேனும் போயிருந்தேன். ‘எங்கேயும்
எப்போதும்’ போல் ஓவியா நீட்டாக ட்ரெஸ் பண்ணியிருக்க, அஞ்சலி இப்படி அரைகுறை ட்ரெஸ் அணிந்து ‘களவாணி’ யாக மாறியிருப்பது கண்டு அதிர்ச்சிதான்.
ஆகவே, வன்மையாக கண்டிக்கிறேன், அந்தக் கவர்ச்சியை ரசித்தபடியே
கே: எஸ்.ஏ. சந்திரசேகருக்குப் பதில் தயாரிப்பாளர் சங்கத்தை தலைமை தாங்க தகுதியானவரா, ராவுத்தர் ? மணிகண்டன், திருநெல்வேலி.
கி: கண்டிப்பாக. ராவுத்தரின் உடல்ரீதியாக தாங்குவாரா என்ற சந்தேகத்தில் கேட்டிருக்க மாட்டீர்கள் என்று திடமாக நம்புகிறேன். மற்றபடி ‘அம்மாவின்’ கடைக்கண் பார்வை எஸ்.ஏ.சியை விட ராவுத்தருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையிலேயே ராவுத்தர் தற்காலிக தலைவராக்கப்பட்டிருக்கிறார்.
விளைவை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கே: படத்துக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால்தான் மக்களை ஈஸியாக ரீச் ஆகமுடியும் என்கிறாரே உதயநிதி, இது உனக்கு ஓகே வா கிளியாரே? வாசுதேவன், ராமநாதபுரம்.
கி:தாத்தாவின் ரத்தம் பேரனுக்கு ஓடாதா என்ன?. அவர்கள் உயிர் தமிழுக்கு என்பதெல்லாம் உங்கள் உயிரைக்கருத்தில் கொண்டு சொல்வதுதான். சன் நெட்வொர்க்கில் துவங்கி,உதயநிதியின் ரெட் ஜயண்ட் வரை எதாவது ஒரு நிறுவனத்துக்காவது தமிழில் பெயர் இருக்கிறதா சொல்லுங்கள்.
அடுத்த படம் ரிலீஸாகிற சமயம் ஃபேன்ஸ் க்ளப் ஆரம்பிக்கிற உத்தேசத்தில் இருக்கிறாராம் உதயநிதி. உங்களைப்போல் தமிழ்ப்பற்றாளர்களை அந்த ஃபேனில் தொங்கவிடாமல் இருக்கிறவரை சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்.
கே: கோலிவுட்டில் இப்போதைக்கு நடிகைகளில் யார் நம்பர் ஒன் என்று சொல்லமுடியுமா? ராஜாராம்,வேலூர்.
கி: பிரபுதேவா பின்னால் போகாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக நயனை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. இந்திக்குப் போகாமலிருந்திருந்தால் அந்த இடத்தில், அசின் குஷன் போட்டு அமர்ந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். தெலுங்குக்கு திசைமாறாமல் இருந்திருந்தால், த்ரிஷா பேஷா அந்த இடத்தைப்பிடித்திருப்பார்.
ஆகையினால், என் ஓட்டு உள்ளங்கவர் கள்வி காஜல் அகர்வாலுக்கே.
கே: நகைச்சுவைப்புயல் வடிவேலு பழைய ஃபார்முக்கு வர வாய்ப்புள்ளதா? மணிகண்டன்,திருமங்கலம்.
கி:நகைச்சுவை நடிகர்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா. சுமார் 25 வருட சினிமா வாழ்க்கையில் ஒரு பத்து முறையாவது ஃபார்ம் அவுட்டாகி மீண்டு வந்து மீண்டும் மீண்டும் கலகலப்பூட்டியவர்தான் கவுண்டமணி.
ஆனால் துட்டு விசயத்தில் கவுண்டமணி போல் சமயத்துக்கு தகுந்தபடி ‘இறங்கிப்போகாவிட்டால் டவுட்டுதான்.
————-