’தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்’ பழமொழிய உடனே பேக்-அப் பண்ணி, நம்ம சென்னை கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டியில போடுங்க பாஸ்,…
‘ஓட ஓட உலகம் முடியலை,.. பாடப் பாட கேக்க சகிக்கலை’ புகழ் தனுஷ், அவரது அண்ணன், இயக்குனர் குல கண்ணன் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஒரு பாடல், ஒரே ஒரு பாடல் பாட மட்டும் சம்பளமாக எட்டு லட்சம் வாங்கியுள்ளார்.
சுமாரான குரல் வளம் கொண்ட எஸ்.பி.பி, ஜேசுதாஸ், நம்ம இசைஞானி இளையராஜா உட்பட்ட யாருமே ஒரு பாடலுக்கு இதுவரை இவ்வளவு சம்பளம் வாங்கியதாக சம்பவங்கள் எதுவும் இல்லை. ஆனால் பார்ட்-டைம் மற்றும் பாத் ரூம் பாடகரான தனுஷ் எட்டு லட்சம் வாங்கியிருப்பது, இசையுலகை திசை திருப்பியுள்ளது.
இதில் செல்வராகவன் மற்றும் தனுஷின் ‘உள்குத்து’ எதுவும் இல்லையென்று காதுகுத்தும் இசையமைப்பாளர் ஹாரிஸ் செயராசு, தனது ‘அந்த’ பாடலை பாட சரியான பாடகர் தனுஷ்தான் என்றும், அவர் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் தந்து அழைத்து வந்தால்தான் அப்பாடல் ரெகார்டிங்கே நடக்கும் என்று தெரிவித்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் பி.வி. பிரசாத் தரப்பில் தனுஷை அணுக, துவக்கத்தில் படு பிகு பண்ணிய தனுஷ், எட்டு விரலை சம்பளமாக்க் காட்டி, பாடும் சம்பா]வத்துக்கு ஒப்புக்கொண்டாராம்.
இப்ப சொல்லுங்க தெரிஞ்ச தொழலை,..
அடடே,.. கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டியை தேடி ரொம்பப்பேரு ஓடுறாங்க போலருக்கே,..?