ccl

 

நம்ம சினிமா நட்சத்திரங்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங்கில் கவனம் செலுத்துவதை விட பேட்டிங்கில் தான் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். விபரீதமான கற்பனைகளுக்குள்ள போகாதீங்க பாஸ். நாம சொல்ல வர்றது கிரிக்கெட் பேட்டிங்கைப் பத்திதான்.

 

சினிமா நட்சத்திரங்கள் மோதிக்கொள்ளும் சிசிஎல் போட்டிகள் சூடுபிடிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது, அங்கு பிராண்ட் அம்பாசிடர் மற்றும் சியர் கேர்ள்ஸ்களாக வரும் ஹீரோயின்களால் மைதானத்தை சுற்றி, மையல் கொண்டவர்கள் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

 

மேட்ச் நடக்கும் கிரவுண்டுக்குள் நுழைந்து சிசிஎல் மேட்சின் டீசர்ட்டை அணிந்துகொண்டாலே நடிகையின் மார்க்கட்டுக்கு ஏற்பட்ட பேமெண்டாம். இதனால் கலந்துகொண்டு டீ-சர்ட் அணிந்துகொள்வதில் போட்டி அதிகமாகி, ‘கிளாமரா அணிந்து கலக்கப்போவது யாரு?’ என்கிற ரேஞ்சுக்கு மோதல் அதிகரித்து வருகிறது.

 

லேட்டஸ்ட் நிலவரப்படி, குடுமிப்பிடி சண்டை போடாதகுறையாக முட்டி மோதி மார் தட்டிக்கொண்டிருப்பவர்கள் நம்ம குட்டி விஸ்வரூபி ஸ்ருதியும், யாரைப்பாத்தாலும் லவ்ஸ் விட்டுக்கொண்டு அலையும் காஜல் காதல்வாலும் தான்.

 

கடைசி சில மேட்ச்களாக கமலின் கடைக்குட்டி அக்‌ஷராவும், அக்கா ஸ்ருதியுடன் போனஸ் பாய்ண்டாக கோதாவில் குதித்திருக்கிறார்.

 

சிசிஎல் மேட்ச் கூடியவிரைவில் ,.ச்ச்சீ,.. சீச்சி லொள் மேட்சாக மாறாமல் இருந்தால் சரிதான்.

ccl1

 



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.