மிகவும் விரக்தியில் இப்படி சொல்லியிருப்பவர் இயக்குனர் பாலுமகேந்திரா. காரணம் என்னவென்றால் இவரது மிகச் சிறந்த விருது வாங்கிய படங்களான மூன்றாம் பிறை, சந்தியா ராகம், வீடு, மறுபடியும் போன்ற படங்களின் நெகடிவ்கள் இன்று அவரிடம் இல்லை.
தொழில்நுட்பத்தில் மிக அதிகமாக முன்னேறியிருந்தாலும் இப்படி பழையவற்றை மதிப்பதிலும், பத்திரப்படுத்துவதிலும் தமிழ் சினிமா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நாம் இன்னும் மரத்தைச் சுற்றி டூயட் பாடிக்கொண்டேயிருக்கிறோம். ஆனால் மலையாளிகளோ மலையாள சினிமாவின் தந்தை எனப்படும் ஜே.சி.டேனியலின் வாழ்க்கையை படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
செல்லுலாய்ட் சினிமா அழிந்துவிட்டது. டிஜிட்டல் சினிமா வந்துவிட்டது. எனக்கு முந்தைய கால முக்கிய படங்கள் பழைய படங்களின் நெகட்டிவ்கள் டிஜிட்டலாக மாறிவிட்டன. ஆனால் என் காலத்திய படங்கள் அழிந்துவிட்டன. திரைப்பட ஆவணக் காப்பகம் வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்திருக்கிறேன். அதை யாரும் கேட்பதே இல்லை. அவ்வளவு சுரணையற்றவர்களாக நாம் இருக்கிறோம்.. என்று கொதிக்கிறார் பாலு.
ஞாயம்தானே ?