பொதுவாக கமல், விக்ரம் போன்ற ஹீரோக்கள் மற்றும் ஷங்கர், பாலா, மணிரத்னம் போன்ற பெரும் இயக்குனர்கள் தான் வருடக்கணக்கில் படம் எடுப்பார்கள். ஹீரோயின்களை வைத்து இதுபோன்ற வருடக்கணக்குப் படங்கள் எதுவும் பொதுவாக வருவதில்லை.
அதில் விதிவிலக்காக அனுஷ்கா கடந்த ஒரு வருடமாக மகாபலி என்னும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தின் இயக்குனர் ‘நான் ஈ’ புகழ் ராஜமௌலி. நாயகியை மையமாகக் கொண்டு இயங்கும் இந்தப் படத்திற்கு ஒருவருடமாக கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் இந்த ஜீலையில் முடிவடைந்திருக்கின்றன.
150 கோடி ரூபாய் பெரும் செலவில் தயாராகிறது இந்தப் படம். இப்படத்திற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் உட்பட பல பயிற்சிகளையும் எடுத்துள்ளார் அனுஷ்கா. படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் நிகழ்வுகளை வீடியோவாக சமீபத்தில் வெளியிட்டார் ராஜமௌலி. அதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்ததாக இப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகிறது. படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் ரிலீஸாகுமாம்.