அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அனுஷ்கா, த்ரிஷா ஆகிய இருவரும் ஹீரோயின்கள் என்பது ஆதி கால செய்தி.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஆடியோ, ட்ரெயிலர் ரிலீஸ் தேதிகள் நெருங்கிவரும் வேளையில் இயக்குநர் கவுதம் மீது படு அப்செட்டில் இருக்கிறாராம் த்ரிஷா. காரணம் இருவருக்கும் சரிசமமான கேரக்டர் என்க்கூறப்பட்டநிலையில் இப்போது படம் முடிந்து பார்த்தால், அனுஷ்காவுக்கு இருக்கும் முக்கியத்துவத்தில் பாதிகூட திரிஷாவுக்கு இல்லையாம். ஏற்கனவே ஜெயம் ரவியுடன் நடித்த ‘பூலோகம்’ படம் பல மாதங்களாக ரிலீஸாகாமல் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்க, ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, ‘கவுதம் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்’ என்று எதிர்ப்படுவோரிடமெல்லாம் மூக்கு சிந்துகிறாராம் த்ரிஷா.
த்ரிஷாவின் கண்ணீருக்கு காரணமான ‘என்னை அறிந்தால்’ படத்தின் ஆடியோ வெளியீடு டிசம்பர் 11-ம் தேதியும், பட ரிலீஸ் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 11 அன்று இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
அடுத்து ‘பெண்ணை அறிந்தால்’னு ஒரு படம் எடுத்து அதுலயாவது த்ரிஷாவ கொஞ்சம் வெயிட்டா கவனிங்க கவுதம்.