தமிழில் ‘சிறைச்சலை’ என்ற பெயரில் டப் ஆகி வந்த ‘காலாபாணி’ படத்தோடு பிரிந்த இயக்குனர் பிரியதர்ஷனும், ஒள்ப்ப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் 17 ஆண்டுகால இடைவெளிக்குப்பின் மீண்டும் இணைகிறார்கள்.
நண்பர்களின் மேன்மையைப்பற்றிய ஒரு கதையே , இந்த நண்பர்களை மீண்டும் ஒன்று சேர்த்திருக்கிறது என்பது மற்றுமொரு
கூடுதல் தகவல். யெஸ் இவர்களை மீண்டும் ஒன்று சேர்த்திருக்கும் படம் ‘நாடோடிகள்’ படத்தின் இந்தி ரீ-மேக்.
‘’ மீண்டும் ப்ரியனுடன் இணைந்து பணியாற்றப்போவதை நினைத்தாலே பரவசமாக இருக்கிறது. கடைசியாக நான் அவருக்கு ஒளிப்பதிவு செய்த படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை மறக்க முடியுமா? ‘நாடொடிகள்’ இந்திப்படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் மைசூரில் துவங்குகிறது. இந்தப்படம் குறித்த இன்னொரு சந்தோஷமான செய்தி, ஒரு சிறிய இடைவேளைக்கு அப்புறமாக ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலும் எங்களோடு கைகோர்க்கிறார் ‘’ என்று படு உற்சாகமாகிறார் சந்தோஷ் சிவன்.
இந்தியில் பெரும்பாலும், தமிழ் மலையாள ரீ-மேக்குகளையே இயக்கிவரும் ப்ரியதர்சனுக்கு ‘நாடோடிகள்’ பத்தொன்பதாவது ரீ-மேக்காம். ஆனால் இதற்கு முன் பெரும்பாலும் முன்னணி நட்சத்திரங்களை வைத்தே சவாரி செய்து வந்த ப்ரியன், இந்தக்கதையில் பிரபலங்கள் நடித்தால் எடுபடாது என்ற எண்ணத்தில், முதல்முறையாக புதுமுகங்களை வைத்து ரிஸ்க் எடுக்கப்போகிறாராம்.
யாரோ ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்கிறதுக்குப் பதில் நம்ம சசிக்குமார் கானை நடிக்க வச்சி, அந்த ஷாருக்கானுக்கு போட்டியா கொண்டுவரலாமே, ப்ரியன்?