dhanush-sargunam-1

திரையரங்குகளில் வசூல் ரீதியாக ‘வாகை சூடாவிட்டாலும், தரமான படங்களை மட்டுமே இயக்கவேண்டும் என்ற சற்குணத்தின் நற்குணத்தை பறைசாற்றிய படம் ’வாகை சூடவா’.

தற்போது தனது மூன்றாவது படத்தை தனுஷை ஹீரோவாக

வைத்து இயக்கவுள்ளார் சற்குணம். படத்தின் பெயர் ‘சொட்டவழக்குட்டி’. அது என்ன சொட்டவழக்குட்டி?

‘’ இது எங்கள் தஞ்சை வட்டார வழக்குச்சொல். அம்பூட்டு நல்லவன்’ என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். முதலில் படத்தின் தலைப்பைக்கேட்ட உடனே ஆர்வமாக கதை கேட்க அமர்ந்த தனுஷ், முழுக்கதையையும் கேட்டுவிட்டு, எந்தவித திருத்தங்களும் சொல்லாமல், உடனே ஓ.கே சொன்னார். இந்தக்கதை மட்டுமல்ல, நான் ‘களவாணி’ கதையை தயார் செய்த உடனே கூட முதலில் மனதில் நினைத்தது தனுஷைத்தான். அப்போது அவரை அணுகுவது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று நானும் தயாரிப்பாளரும் நினைத்ததால் தனுஷிடம் செல்லவில்லை’’

‘’களவாணி’யில் கூட நகைச்சுவையுடன் ஒரு காதல்கதையும் இருந்தது. ஆனால் இப்போது தனுஷுக்கு ஓ.கே ஆகியிருக்கும் படம் ’நத்திங் பட் நகைச்சுவை’ என்று சொல்லும்படி முழுக்க முழுக்க காமெடிதான்’’

என்கிற சற்குணம், இந்தப்படத்தில், தனது முதல் இரு படத்தில் பயன்படுத்திய டெக்னீஷியன்களைப் பயன்படுத்தவில்லையாம். இசை அநேகமாக யுவன் ஷங்கர் ராஜாவாக இருக்கக்கூடும்.

dhanush-sargunam-1 dhanush-sargunam-1

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.