ஆபாசம்னா என்னங்கண்ணா? – ஒண்ணுந்தெரியாத ஹன்ஷிகா

கேமரா இல்லாவிட்டாலும் சில நடிகைகள் நடிப்பில் பின்னிப்பெடலெடுத்து விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இது.

’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ரிலீஸுக்கு அப்புறம் ஒரே நேரத்தில்,அவன் இவன்’ ஹீரோக்களான விஷால், ஆர்யா இருவரது படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது ஹன்ஷிகா மோத்வாணிக்கு.

விஷால் படத்தை சுந்தர்.சி.யும், ஆர்யா படத்தை ‘வந்தான் வென்றான்’ கண்ணனும் இயக்குவதாக இருந்தது. ஷூட்டிங் தேதிகள் இரண்டு படத்துக்குமே ஏறத்தாழ ஒன்றாக இருந்ததால்,ஏதாவது ஒன்றில் மட்டுமே கமிட் ஆகமுடியும் என்ற சூழலில்,இரண்டில் எதில் நடிக்கலாம் என்று ஓரிரு தினங்கள் தன்னைத்தானே குழப்பிக்கொண்டிருந்த மோத்வாணி இறுதியாய் ஆர்யா படத்தையே செலக்ட் செய்தார்.

ஆர்யா நடிக்கவிருக்கும் அந்தப்படம்’டெல்லி பெல்லி’ என்ற இந்திப்படத்தின் ரீமேக். படு ஆபாசமான காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் நிரம்பிய அந்தப்படம் இந்தியில் ரிலீஸானபோதே கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.படத்தில் மிக நீளமான லிப் டு லிப் முத்தக்காட்சிகளும் உண்டு.

இது குறித்து ஹன்ஷிகாவிடம் கேட்டபோது, ’’அப்படியாண்ணா அந்தப்படம் ரொம்ப ஆபாசமான படங்களா, அப்படிப்பட்ட சீன்கலையெல்லாம் கட் பண்ணச்சொல்லி, டைரக்டருகிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட வேண்டியதுதான். நமக்கும் ஆபாசத்துக்கும் ரொம்ப தூரம். நம்ம தமிழ்நாட்டு ஜனங்க என்ன குடும்ப குத்துவிளக்காதான் பாக்குறாங்க’ என்று அநியாயத்துக்கு வழிகிறார்.