பெரும் தடபுடலுடன் ஆரம்பிக்கப்பட்ட விக்ரமின், ’கரிகாலன்’ படம் ஏறத்தாழ டிராப் ஆகும் நிலைக்கு வந்துவிட்டது.
எஸ்.எஸ்.வாசன், எஸ்.பார்த்தி ஆகியோர் தயாரிப்பில், வெளிநாட்டுத் தமிழரான கண்ணன் என்பவர் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம் ’கரிகாலன்’ .இப்படத்தில் விக்ரமுடன், அஞ்சலி, ராதிகா ஆப்டே, பசுபதி ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரு சில தினங்களே படப்பிடிப்பு நடந்திருந்த நிலையில்,படத்தின் கதை உரிமை கோரி ஒருவர் கோர்டுக்கு சென்றதை ஒட்டி, பிரச்சினை எழ ஆரம்பிக்க, எப்படா சந்தர்ப்பம் வரும் என்று காத்திருந்தது போல், விக்ரம் எஸ்கேப் ஆகி அடுத்தடுத்த படங்களுக்கு ஓட ஆரம்பித்தார்.
இதற்கு முந்தைய படமான ‘தாண்டவம்’ படத்தில் நடிக்க விக்ரம் கிளம்பியபோது குறுக்கே மறித்த கரிகாலன் தயாரிப்பாளர்களிடம், ’படத்தொட டைரக்டர் கண்ணனுக்கு சுத்தமா டைரக்ஷன் தெரியலை. அதனால அவர மாத்திட்டு, வேற டைரக்டோட வாங்க யோசிக்கலாம்’ என்றாராம்.
அதன்படியே படத்தின் கதாசிரியரான காந்திகிருஷ்ணாவை இயக்குனராக்கிச்சென்றபோது, அடுத்து நான் ஆஸ்கார் ஃபிலிம்ஸ்ல ஷங்கர் சார் படம் பண்ணப்போறேன். அதுக்கப்புறம்தான் யோசிக்கமுடியும்’ என்று பழையபடி திருப்பி அனுப்பிவிட்டாராம்.
தலையில் துண்டைப்போட்டபடி, கோர்டுக்குப்போகலாமா, அல்லது கவுன்சிலுக்குப் போகலாமா என்று யோசித்து வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.