’ஒஸ்தியான கதை கிடைக்கும் வரை தமிழில் நடிக்க மாட்டேன்’ – பகுத் அச்சா ரிச்சா

richa news

ஒரு சிறு இடைவெளிக்குப்பின், கொஞ்சம் புஷ்டியாக, பார்க்க லட்சணமாக கோடம்பாக்கத்துக்கு கிடைத்த சூப்பர் ஃபிகர் ரிச்சா கங்கோபாஹ்தியாய.

அறிமுகமே சிம்பு, தனுஷின், ‘ஒஸ்தி, ‘மயக்கம் என்ன ‘படங்கள் என்பதால் ரிச்சா, பகுத் அச்சாவாக தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இரு படங்களின் சொதப்பலான ரிசல்ட், ரிச்சாவை அப்செட் ஆக்கிவிடவே, மூட்டை முடிச்சுகளோடு, சொந்த ஊரான பெங்காலுக்கு கிளம்பிப் போய்விட்டார்.

‘’நான் தமிழில் நடித்த இரு படங்களுமே பெரிய நடிகர், பெரிய டைரக்டர் படங்களாக இருந்ததால், கதை கேட்காமல் ஒப்புக்கொண்டேன். இனி அத்தகைய தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காகவே, மிக கவனமாக கதை கேட்டு வருகிறேன், கடந்த ஒரு வருடத்துக்குள், இந்தியிலும், தமிழிலுமாக இதுவரை ஒரு டஜன் கதைகளுக்கும் மேல் கேட்டு நிராகரித்திருக்கிறேன். இடையில் அடிக்கடி சென்னை வரவேண்டி இருந்ததால், கொஞ்சம் நன்றாகவே தமிழ் கற்றுக்கொண்டுவிட்டேன். அடுத்து நான் நடிக்கும் ஹமிழ்ப்படத்தில் நானே டப்பிங் பேசினாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை.

இப்போதைக்கு எனது தாய்மொழியான பெங்காலியில் ஒரே ஒரு படம் மட்டுமே நடித்துக்கொண்டு நன்கு ரெஸ்ட் எடுத்து வருகிறேன்’’ என்கிறார் சும்மா இருப்பதையே சுகமாய் நினைக்கும் சுந்தரி கங்கோபாத்தியாய நமஹ.