ரஜினிக்கு 240 கோடி சம்பளமா? சாக்ஸ் போட்டு தாக்ஸ்

கோடம்பாக்கத்தின் நேற்றைய ஹாட்டஸ்ட் நியூஸ், ரஜினியை சன் டி.வியின் எக்ஸ் செயல் அதிகாரி சரத் சக்ஸேனா சந்தித்ததுதான்.

எந்திரனை சன் டி.வியை வாங்க வைப்பதில் பெரும்பங்கு வகித்த நாளிலிருந்தே, திருவாளர்கள் மாறன் பிரதர்ஸ் அளவுக்கு, ரஜினியிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர் சாக்ஸ்.

விரைவில், சன் டி.வி.க்குப் போட்டியாக சானல் ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்த சாக்ஸ், படத்தயாரிப்பிலும் மும்முரமாக இறங்கியிருக்கிறார். முன்னணி ஹீரோக்கள் மற்றும் முன்னணி இயக்குனர்களுடன் சுமார் அரை டஜன் புராஜக்டுகளுக்கும் மேல் பேசி வரும் சாக்ஸ், சன் டி.வியை உலுக்கும் விதமாக ஒரு படம் தயாரிக்கும் திட்டத்துடன் சூப்பர்ஸ்டார் ரஜினியைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது, ரஜினி மகள்கள் ஏற்படுத்தியிருக்கும் கடனை ஒரே நாளில் அடைத்துவிடும் திட்டம் தன்னிடம் இருப்பதாகவும், அதன்படி ரஜினி தனக்கு வெறும் முப்பது நாள் மட்டுமே கால்ஷீட் தந்தால், ஒரு நாளைக்கு எட்டு கோடி வீதம், மொத்தம் 240 கோடி வரை தன்னால் ரஜினிக்கு சம்பளம் தரமுடியும் என்றும் தெரிவித்தாராம்.

அதைக்கேட்டு வாயையும் பொழந்த ரஜினி, ‘’எப்பிடி, எப்பிடி?? என்று வியப்பில் மூழ்கி,’’ சரி சரி அவசரமில்லை. நிதானமா ஒர்க் அவுட் பண்ணி, எனக்கு இவ்வளவு சம்பளம் குடுத்து படம் எடுத்தா, அந்தக்காசை எப்பிடி திரும்ப எடுக்கமுடியும்?, யாரு டைரக்டர்? ,கதை என்ன? எத்தனை மொழியில படத்தை தயாரிக்கபோறீங்க? மாதிரி எல்லா விவரத்தோடயும் என்ன வந்து பாருங்க’’ என்று அனுப்பி வைத்திருக்கிறாராம்.

தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம்,கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் அப்பட்த்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கும் சாக்ஸ், தற்போது ஒரு பெரிய டீமுடன் ரகசிய இடத்தில் ரஜினி படத்துக்கான சதித்திட்டங்களை தீட்டிவருகிறார்.

ஒருவேளை இப்படம் நடந்தால், இந்தியாவிலேயே மிக அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம்,அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர், அதிக மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம் போன்ற பல பெருமைகளுக்கு வாய்ப்பிருக்கு.