இயக்குனரின் விமான டிக்கட்டுக்காக ‘பிச்சையெடுத்த’ நிகழ்ச்சியாளர்கள்

anrp
’தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற ஒரு சுமாரான படம் கொடுத்துவிட்டு, வடகிழக்கு, தென்கிழக்கு,தென்மேற்கு வடைகிழக்கு உட்பட அத்தனை திசைகளிலும் ரவுசு விட்டுக்கொண்டு  அலைந்த மீனு ராமசாமிக்கு, ‘நீர்ப்பறவை’யின் தோல்வி மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்து விட்டதாம். இன்னொரு பக்கம் பத்திரிகை விமர்சனங்களும் மீனை தங்கள் இஷ்டத்துக்கு கூறு போட்டுக்கொண்டிருக்க, படத்தின் நாயகன் மாதிரியே 24 மணிநேர நீர்ப்பறவை ஆகிவிட்டாராம்.
திரையுலக நிகழ்ச்சிகளில் பலவற்றிற்கும் நீரிலேயே ஆஜராக ஆரம்பித்திருக்கும் ராமசாமியை குறுகிய காலத்திற்குள்ளாகவே பலரும் அடுத்த ’தங்கர்பச்சான்’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். காரணம், ‘நீர்ப்பறவை’ சரியாக ஓடவில்லையென்றதும், தங்கர் பாணியிலேயே , ‘இனிமே தமிழ்லயோ, தமிழனுக்கோ படம் எடுக்க மாட்டேன்’ என்று ராமசாமி பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்திருப்பது. இது ஒருபுறமிருக்க ஒன்றிரண்டு ஆர்வக்கோளாறுகள், ‘சரி மீனவன் பிரச்சினையை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கவாவது செஞ்சாரே என்று ’பார்’ஆட்டு விழா நடத்த வெளியூர்களுக்கு அழைத்தால் விமான டிக்கட் இல்லாமல் வர இயலாது’ என்று வீம்பு பிடிக்கிறாராம்.  கடந்த வாரம் திருப்பூரில் ‘களம் ‘திரைப்பட அமைப்பினர் மீனு ராமசாமியை வைத்து ஒரு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.  ராமசாமியாரின் கட்டளைக்கிணங்க, பிச்சையெடுக்காத குறையாக வசூலில் இறங்கி அவருக்கு விமான டிக்கெட் போட்டு நிகழ்ச்சியாளர்கள் காத்திருக்க, ஓவராகப் போட்டுவிட்டு விமானத்தை தவறவிட்டுவிட்டாராம் சீனு. வேறுவழியின்றி ஒன்றிரண்டு குறும்படங்களைப்போட்டு பார்வையாளர்களின் கோபப்பார்வையிலிருந்து தப்புவதற்குள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு தாவு தீர்ந்துவிட்டதாம்.  திருப்பூர்லயும் கடைகள் இருக்கு ஷைடிசுக்கு மீன்களும் கிடைக்கும்ங்கிறதை டைரக்டக்கருக்கு நிகழ்ச்சியாளர்கள் எடுத்துச்சொல்லாம வுட்டுட்டாங்களோ?’