ஜாக்கிசான் நடிக்கும் CZ12 – சைனீஸ் ஜோடியாக்

jackie-chan-cz12-1dec12

ஜாக்கிசானுக்கு வயது 58 ஆகிறது. இந்த வயதிலும் மாடியிலிருந்து குதித்து, வித்தியாச வண்டியில் பயணித்து என்று ரிஸ்க் எடுத்து நடித்து வெளிவரப் போகும் அவரது அடுத்த படம் தான் சைனீஸ் ஜோடியாக் (தமிழ் டப்பிங் பெயர் ‘இவன் நினைத்ததை முடிப்பவன்’).

முதலில் உலகம் அழியப் போகுது என்று களேபரம் பண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் 12-12-2012 அன்று தான் படத்தை வெளியிடுவதாக இருந்தார். பின்னார் சில காரணங்களால் டிசம்பர் 20ம் தேதி பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜாக்கிசானின் ஆர்மர் ஆப் காட் படத்தின் அடுத்த பாகம் போல் வெளிவருகிறது இப்படம். இதைத் தயாரித்து, நடித்து, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார் ஜாக்கிசான்.

7 வருடங்களாய் எழுதி வந்த இப்படத்தின் ஸ்கிரிப்ட்இப்படத்திற்காகவும் மாடியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்து நடப்பது உட்பட ரிஸ்க்கான பல ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார் இந்த 58 வயது இளைஞர்.

தான் ஆக்ஷன் படங்களில் நடித்து மிகவும் சோர்வடைந்து விட்டதாகவும், இதுவே தனது கடைசி ஆக்ஷன் படம் என்றும் ஜாக்கிசான் கூறியிருக்கிறார். இனிமேல் தனது வயதுக்கேற்ற, கதையம்சம் உள்ள பாத்திரங்களில் மட்டுமே நடிக்கப்போவதாகவும் கூறியுள்ளார் ஜாக்கிசான்..

இதுவரை சுமார் 100 படங்களில் நடித்துள்ள ஜாக்கிசானுக்கு இது 101ஆவது படமாகும்.

கீழே பாருங்கள் CZ12 படத்தின் ட்ரெய்லரை

http://www.youtube.com/v/4YtAbUU5jk8