jemo

ஜெயமோகனின் ஒரு அறிக்கையை வெளியிட்டாலும் வெளியிட்டோம். போகிற இடத்தில் எல்லாம் உதவி இயக்குனர் கேள்வி மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எல்லா கேள்விகளுக்கும் ஒரே தடவையாக பதில் சொல்லி விடலாம்

என்றுதான் இந்த கேள்வி பதில் செக்ஷன்!

கடல் படத்தின் தோல்வி குறித்து ஜெயமோகன் அவரை ஒரு நீதிமானாக முன்வைத்து அறிக்கை கொடுத்திருக்கிறாரே?

கடல் படத்தின் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் சுமார் 40 கோடி .

வெறுமனே 6 கோடி ரூபாய்க்கு படத்தை எடுத்து விட்டு, அதை 28 கோடி ரூபாய்க்கு கைமாற்றி விட்டு , ஒரு சிட்ஃபண்ட் மோசடிக்காரன் போல், ஈமுக்கோழி மோசடிக்காரன் போல தலைமறைவாகி விட்டார் மணிரத்தினம்.வெறுமனே படத்துக்கு வசனம் எழுதிவிட்டு, பொத்திக்கொண்டு போவதை விட்டு, இது பெரிய பட்ஜெட் படம். இதற்கு 50 கோடி செலவு வரும் அளவுக்கு கனமான கதை எழுதியிருக்கிறேன்’ என்று பத்திரிகைகளில் பீலா விட்டவரே ஜெயமோகன் தான்.

நம் காலத்து நாயகன் என்று புகழப்பட்ட மணிரத்தினம் நயவஞ்சகத்தின் நாயகனாகிவிட்டார்!

ஒரு நள்ளிரவில் பல விநியோகஸ்தர்கள் அந்த வஞ்சகத்திற்குப் பலியாகி விட்டார்கள்!

மணிரத்தினம் மோசடி செய்த பணத்தின் ஒரு பங்கைத்தான் நாகர்கோயிலில் அமர்ந்து குடும்பத்தோடு தின்று கொண்டிருக்கிறார் படத்தின் தோல்விக்கு முழு முதல் பொறுப்பாளியான ஜெயமோகன்.

இவர் இவரை நீதிமானாக நினைத்துக் கொண்டால் மேன்மக்கள் தங்கள்     ‘–த்தால் சிரிப்பார்கள்!

திரையுலகின் நுரையீரல் போன்றவர்கள் விநியோகஸ்தர்கள். இன்று அவர்கள்40 கோடியை இழந்து தெருவில் நிற்கிறார்கள்.

அவர்களுக்கு நியாயமான முறையில் பணத்தை திருப்பிக் கொடுக்கா விட்டால் மணிரத்தினத்திற்கோ ஜெயமோகனுக்கோ பிண்டம் வைத்தால் தின்ன காக்காய் வராது!

 நான் ஒவ்வொரு காட்சியையும் உலக சினிமா தரத்திற்கு எழுதிக் கொடுத்தேன். மணிரத்தினமும் உலக சினிமா தரத்திற்கு எடுத்தார்..இங்கிருக்கிற விசிலடிச்சான் குஞ்சு ரசிகர்களுக்குத் தான் படம் புரியவில்லை என்று ஜெயமோகன் சொல்லியிருக்கிறாரே?

முதல் விஷயம் மணிரத்தினத்திற்கே உலக சினிமா என்றால் என்ன என்று தெரியாது.

உலக சினிமாவை உள்வாங்கிய ஒருவனிடம் திருட்டுத் தனமும் மொள்ளமாரித்தனமும் வெளியேறி விடும். மணிரத்தினத்திற்கு அது இன்னமும் உள்ளே இருக்கிறது.

அவர் உலகம் முழுவதும் வெளியாகும் படங்களை, கதை திருடுவதற்காக, காட்சிகளைத் திருடுவதற்காகப் பார்க்கிறவர். அவ்வளவே!

ஜெயமோகனுக்கு சினிமா என்கிற வஸ்தே தகராறு என்பது தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த வரலாறு.

இதில் எங்கே இந்த இரண்டு அரைகுறைகளும் சேர்ந்து உலக சினிமாவை எடுக்க?

எல்லோரும் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்களே என்று அவரும் பயன்படுத்தியிருக்கிறார்.

அவர் அந்தக் கட்டுரையில் ஜெயமோகன் சினிமா குறித்துப் பேச பயன்படுத்தியிருக்கிற வார்த்தைகளை வாக்கியங்களை படித்து விட்டு திரையுலக நண்பர்கள்      ‘-த்தால் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்!

 இலக்கிய எழுத்தாளர்களை திரைக்கதை வசனம் எழுத பயன்படுத்துவது சரியா? தவறா?

இதற்கு கமல் அவர்கள் சொன்ன ஒரு பதிலைத்தான் சொல்ல வேண்டும்.

ஒரு இயக்குனர் கம் தயாரிப்பாளர், எஸ். ராமகிருஷ்ணனை திரைக்கதை வசனகர்த்தாவாகப் போட்டு ஒரு படம் எடுத்திருந்தார். படம் அட்டர் ஃபிளாப்.

இயக்குனருக்கு வரிப்புலி போல உடலெல்லாம் காயங்கள். அதோடு ஆறுதலுக்காக கமலைத் தேடிப் போயிருக்கிறார்.

கமல், யார் அந்த எஸ்.ராமகிருஷ்ணன்? என்று கேட்டிருக்கிறார்

அவர் ஒரு எழுத்தாளர் என்றிருக்கிறார் இயக்குனர்.

கமல்சிரித்து, எஸ். ராமகிருஷ்ணன் யாருன்னு தெரியாம கேக்கல. சினிமால அவரு யாருன்னு கேட்டேன்.

அவரு நிறைய உலக சினிமால்லாம் பாப்பாரு! நிறைய எழுதுவாரு..

‘உலக சினிமா நிறைய பாக்கிறவற வசனம் எழுத வைக்கலாம்னா, பர்மா பஜார்ல திருட்டு டிவிடி விக்கிற பஸீரைக் கூட வசனம் எழுத வைக்கலாம். அவரும் எல்லாப் படத்தையும் பாக்கிறாரு. நிறைய எழுதுறவர வசனகர்த்தாவா போடலாம்னா, நியூஸ் பேப்பர்ல நியூஸ் எழுதறவங்கள போடலாம்; போட வேண்டியது தான என்றிருக்கிறார்.

இயக்குனருக்கு மண்டை கொய்ங் என்றிருந்திருக்கிறது!

அப்பொழுது கமல் சொல்லியிருக்கிறார்.

‘சினிமா வாழ்க்கை முறை என்று ஒன்றிருக்கிறது, அதற்கு உட்படாதவன் லட்சம் உலக படம் பார்த்திருந்தாலும், லட்சம் பக்கம் எழுதியிருந்தாலும், சினிமாவில் அவனால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது.

இது புரியாமல் ஜாதகம் எழுதுகிறவர், பத்திரம் எழுதுகிறவர், சிறுகதை எழுதுகிறவர் என்றெல்லாம் யாரையாவது கூட்டிக் கொண்டு வந்து சினிமா கதை வசனம் எழுத வைத்தால் இப்படித்தான் உடலெல்லாம் சூடு பட்டு நிற்க வேண்டும் என்றிருக்கிறார்.

இதை சினிமாவிற்கு கதை வசனகர்த்தா முடிவு செய்யும் இயக்குனர்கள் தாரக மந்திரமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எஸ். ராமகிருஷ்ணன் வசனம் எழுதி இதுவரை 150 கோடி வரை சினிமாவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. ஜெயமோகன் வசனம் எழுதி கிட்டத்தட்ட 100கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்னும் இயக்குனர்கள் அவர்களை தங்கள் படத்திற்கு அழைப்பது ஏன்?

ஒரு படம் கமிட் ஆகும் போது தயாரிப்பாளர், இயக்குனர் கேட்பதையெல்லாம் செய்து கொடுக்கும் மனநிலையில் இருப்பார். அவருக்கு ராமகிருஷ்ணனையும் தெரியாது; ஜெயமோகனையும் தெரியாது

இயக்குனர்களுக்கு அடிப்படையில் ஒரு காம்ப்ளக்ஸ் இருக்கும் .

இலக்கியவாதிகள் நம்மை மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், சிலாகிக்க வேண்டும் என்று அவர்கள் உள்ளூர விரும்புவார்கள்.

அந்த சமயத்தில்தான் இயக்குனர்கள் தங்கள் படத்திற்கு வசனம் எழுத இந்த எழுத்தாளர் வேண்டும் என்று கேட்பது. அவர்களுக்கு பத்து லட்ச ரூபாய், இருபது லட்ச ரூபாய் சம்பளம் பேசி படத்தில் கமிட் செய்து கொள்வார்கள்.

இவர்களையும் சும்மா சொல்லக்கூடாது. அப்படி அழைக்கிற இயக்குனர்களை நக்கு நக்கென்று நக்கி விடுவார்கள்.

அவர்களை தங்களுடைய புத்தக வெளியீட்டு விழா, அறக்கட்டளை விழா, மேலும் பல இலக்கிய விழா இதற்கெல்லாம் அழைத்துச் சென்று அவர்களுக்கு புனித நன்மை செய்வார்கள்.

இயக்குனர்களும் தங்களுடைய பொது அறிவை வளர்த்துக் கொள்ள அவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.

அத்வைதம் என்றால் என்ன? த்வைதம் என்றால் என்ன? என..

எதுவும் கேட்காமலே இவர்கள் 400 மணி நேரம் பேசக்கூடியவர்கள். இப்படி கேள்வி வேறு கேட்டுவிட்டால்..அவ்வளவுதான்..ராமகிருஷ்ணன் கார்பரேஷன் லாரி குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவது போல லாரி லாரியாகப் பேசுவார். ஜெயமோகன் 400 பக்கத்திற்கு அன்று இரவே டைப் அடித்து அனுப்புவார்.

இப்படி அந்த சினிமாவிற்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் அங்கே தினந்தோறும் நடக்கும்.

அப்பாவி உதவி இயக்குனர்கள் இதை பரிதாபமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படி அந்த படம் நடக்கிற நாட்கள் முழுவதும் படத்திற்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் தயாரிப்பாளரின் செலவில் நடந்து…

படம் கடைசியாக ஊத்திக்கும்!

இதனால்தான் ‘இந்த எழுத்தாளர்களை சினிமாவில் பயன்படுத்துவது என்பது சொந்தக்காசில் சூன்யம் வைத்துக் கொள்கிற காரியமாக இருக்கிறது.

 மலையாளத்தில் மூன்று திரைக்கதைகள் முடித்துக் கொடுத்திருக்கிறேன். இன்னும் இரண்டு திரைக்கதைகள் முடித்துக் கொடுக்க இருக்கிறேன். தமிழில் இரண்டு திரைக்கதைகள் இம்மாதத்தில் துவங்கி இரண்டு மாதத்தில் எழுதிக் கொடுத்து விடுவேன். வசந்த பாலனுக்கு ஒரு திரைக்கதை முடித்து விட்டேன். என்று ஒரு பெரிய பட்டியலே சொல்கிறாரே ஜெயமோகன். இதெல்லாம் ஒரு தனி மனிதனால் சாத்தியமா?

முடித்துக் கொடுப்பதற்கு இரண்டு அர்த்தம் இருக்கிறது..

ஒரு முடித்துக்கொடுப்பது கதம் கதம்.

இன்னொரு முடித்துக் கொடுப்பது நிறைவு செய்து கொடுப்பது..

இந்த அறிவும் வித்தியாசமும் ஜெயமோகனுக்கும் தெரிவதில்லை! ராமகிருஷ்ணனுக்கும் தெரிவதில்லை!

ஒரு கதை திரைக்கதையாக உருமாறுகிற போது கதையும் திரைக்கதையும் துல்லியமாக ஒரு புள்ளியில் இணைய வேண்டும்.

அதற்கு நிறைய மெனக்கெடல்களும் மன உழைப்பும் வேண்டும்.

நிச்சயமாக அந்த திரைக்கதைக்காக செலவளிக்கிற கால அளவிற்கு ஒரு இடம் இருக்கிறது.

திரைக்கதை எளிதில் ஏமாற்றும் தன்மை கொண்டது. அதை உன்னிப்பாக மனதில் கவனித்துக் கொண்டும், அசை போட்டுக் கொண்டும், விவாதித்துக் கொண்டும், தொடர்ந்து அதன் மீது செயல்பட்டுக்கொண்டும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது தான் ஒரு பனித்திரை விலகி திரைக்கதையும் கதையும் ஒரு புள்ளியில் இணையும்.

அதனாலேயே பல முதல் பட இயக்குனர்களின் கதை பெரும் வெற்றிப் படமாக அமைவதை நாம் எல்லோரும் கவனித்திருக்க முடியும்

வசந்தபாலனின் வெயில் அப்படி ஒரு நீண்ட நெடிய மன உழைப்பை பெற்ற திரைக்கதை. அதனாலேயே அது அந்த வெற்றியையும் புகழையும் அடைந்தது.

அவருடைய மற்ற படங்கள் அந்த வெற்றியை பெற முடியாமல் போனதற்கு இது போல திரைக்கதையை சீக்கிரம் முடித்துக் கொடுக்கிற( கதம் கதம்) ஆசாமிகள் உள்ளே புகுந்ததுதான் காரணம்.

இவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு பிளாக்குகள் எழுதி , நாவலில் கொஞ்சம் எழுதி, பிறகு ஒரு சிறுகதை எழுதி, வாரப்பத்திரிகைக்கு தொடர்கள் எழுதி இடைப்பட்ட தருணத்தில் வேகவேகமாக திரைக்கதையும் எழுதி முடிப்பதால் தான் (கதம் கதம்) அந்தப் படங்கள் பெரும் தோல்வியைத் தழுவிகின்றன.

அந்த திரைப்படத்தோடு சம்பந்தப் பட்டத் தயாரிப்பாளர் தலையின் துண்டைப் போடுகிறார். விநியோகஸ்தர்கள் தெருவிற்கு வருகிறார்கள். இயக்குனர்கள் மோசடி செய்து ஒரு நயவஞ்சகனாக ஒளிந்து வாழ வேண்டியிருக்கிறது. பல இயக்குனர்கள் அடுத்தப் படம் கிடைக்காமல் முடங்கிப் போக வேண்டியதாகிறது!

மேற்காணும் கேள்வி பதிலில் இரண்டு இடங்களில் ‘-த்தால் சிரிப்பார்கள் என்ற வாக்கியம் வருகிறது? அந்த விடுபட்ட முதல் எழுத்து என்ன?

எல்லாத்தையும் எழுத்துக்கூட்டியாங்க சொல்லமுடியும்,.. உங்க பங்குக்கு நீங்க அட்லீஸ்ட் அந்த ஒரு எழுத்தையாவது யோசிங்க பாஸ்.

es.ra

 

 

 

 

 

 

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.