power1

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் காதலில் ஈடுபட்டால். அதற்கு இந்தியன் பீனல் கோட் பிரகாரம், தண்டனை வழங்கும் சட்டம் எதையாவது சீக்கிரம் கொண்டுவந்தால் நாட்டுக்கு, வீட்டுக்கு, நம்ம நகைக்கடைக்கார சேட்டுக்கு என்று அனைவருக்கும் நல்லது. ஏனெனில் பவர்ஸ்டார் நடித்து வரும் பல படங்களில் அவர் ஸ்கூல் பொண்ணுங்களை லவ் பண்ணுவது போலவே, கல்நெஞ்சோடு கதை அமைத்திருக்கிறார்களாம்.

எஸ்.எம்.ஆர். கிரியேஷன்ஸ் சார்பில் புதுச்சேரி ஆர்.பன்னீர் செல்வம் தயாரிக்கும் படம் நாலு பொண்ணு நாலு பசங்க’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்குகிறார் சிரஞ்சீவி அனீஸ்.

இந்த படத்தில் காதல் பித்தனாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்க, அவருடன் முக்கிய காமெடி வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், நெல்லை சிவா, ஆர்த்தி, நான்ஸி, ராமசந்திரன், சுந்தரி, வீரா, ரியாஸ்கான் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மதுரவாயல் பகுதியில் நடை பெற்றது. பட காட்சியின் படி ஒரு மரத்தடியில் சலூன் கடை வைத்திருப்பவர் பவர் ஸ்டார்.

அவரிடம் சேவிங் செய்து கொள்ளும் எம்.எஸ்.பாஸ்கரிடம் தனது காதலின் ஆழத்தை தெரிவித்து, அவளை தன்னுடன் சேர்த்து வைக்க உதவி கேட்பார் பவர் ஸ்டார்.

அதற்கு எம்.எஸ்.பாஸ்கர், ஐடியா சொல்லுகிறார். அந்த ஐடியாவைக்கேட்டுவிட்டு, தான் காதலிக்கும் பெண்ணிடம் அப்ளை பண்ணுவதற்காக அரக்கபரக்க ஓடுவார் பவர். இந்த படத்தில் நடித்தது பற்றி பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாவது:-

நாலு பொண்ணு நாலு பசங்க இந்த படத்தில் புதுமுகமாக அறிமுகம் ஆகிறார்கள். இதுல காதல் பித்தன் என்கிற கேரக்டர்ல எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். அவரோடு நானும் முதல் முறையா சேர்ந்து ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். ரொம்ப நல்ல கேரக்டர். ரொம்ப ரசித்து நடிக்கிறேன். கலகலப்பான காட்சிகள் நிறைய இருக்கு. அதே போல படப்பிடிப்பும் கலகலப்பா போய்கிட்டு இருக்கிறது.

மனசும் மனசும் இணைவது மட்டுமல்ல காதல். நல்ல மனிதர்களை இணைப்பதும் காதல்தான். காதல் பொழுது போக்கு அல்ல. அது சக்தி வாய்ந்த உறவு என்பதை வலியுறுத்தி இந்த படத்தை இயக்குகிறார் இயக்குனர் சிரஞ்சீவி அனீஸ்.

இது என் வயசுக்கு ஏத்த காதல்கதை. இனியும் கூட, இதையும் விட இளமையான ‘பன்னீர் புஷ்பங்கள்’ மாதிரி ஸ்கூல் பையன் கேரக்டர்கள்ல காதல் பண்ணி கலக்கனும்னு ஆசையா இருக்கு’ என்கிறார் பவர்.

‘யோவ் உன்ன சீக்கிரமே கொலைக்கேஸ்ல புடிச்சி உள்ள போடப்போறாங்க பாரு,…

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.